கிரிக்கெட்

இந்திய கிரிக்கெட் அணிக்கு ஜனாதிபதி, பிரதமர் வாழ்த்து + "||" + President, Prime Minister congratulate the Indian cricket team

இந்திய கிரிக்கெட் அணிக்கு ஜனாதிபதி, பிரதமர் வாழ்த்து

இந்திய கிரிக்கெட் அணிக்கு ஜனாதிபதி, பிரதமர் வாழ்த்து
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை வென்ற இந்திய கிரிக்கெட் அணிக்கு ஜனாதிபதி, பிரதமர் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
புதுடெல்லி,

ஆஸ்திரேலிய அணியை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தி முதல்முறையாக டெஸ்ட் தொடரை வென்று இந்திய அணி சாதனை படைத்தது. சரித்திரம் படைத்த இந்திய கிரிக்கெட் அணியினர் பாராட்டு மழையில் நனைந்து வருகிறார்கள். ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி ஆகியோர் டுவிட்டர் மூலம் விராட்கோலி தலைமையிலான இந்திய அணியினருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, இந்திய முன்னாள் வீரர்கள் தெண்டுல்கர், பிஷன் சிங் பெடி, வி.வி.எஸ்.லட்சுமண், ஷேவாக், கவுதம் கம்பீர் மற்றும் மைக்கேல் வாகன், மெக்ராத் உள்ளிட்ட வெளிநாட்டு வீரர்களும் இந்திய அணியினருக்கு வாழ்த்து தெரிவித்து இருக்கிறார்கள்.


தொடரை வென்ற பிறகு இந்திய அணி கேப்டன் விராட்கோலி தனது டுவிட்டரில் சிறப்பு செய்தியை பதிவிட்டுள்ளார். அதில், ‘இந்த அணியில் இடம் வகிப்பதை நினைத்து பெருமிதம் அடைகிறேன். மிகவும் உணர்ச்சிகரமான தருணம். இது ஒரு அணி மட்டுமின்றி ஒரு குடும்பமாகும். இதில் இருந்து மென்மேலும் ஏற்றம் காண்போம்’ என்று குறிப்பிட்டுள்ளார். இதேபோல் விராட்கோலியின் மனைவி அனுஷ்கா சர்மாவும், டுவிட்டர் மூலம் இந்திய அணி வீரர்கள் அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.