கிரிக்கெட்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடர்: பும்ராவுக்கு ஓய்வு + "||" + Bumrah rested for Australia ODIs, New Zealand tour

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடர்: பும்ராவுக்கு ஓய்வு

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடர்: பும்ராவுக்கு ஓய்வு
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இருந்து பும்ராவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.
மும்பை,

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டித்தொடரில் அபாரமாக பந்து வீசிய பும்ரா, ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களை கலங்கடித்தார். மொத்தம் 157 ஓவர்கள் வீசிய பும்ரா 21 விக்கெட்டுகளை அள்ளினார்.  அவரது பந்து வீச்சு சராசரி 17 ஆகும். 

பும்ராவின் பணிச்சுமையை கவனத்தில் கொண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து  அவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. 
அதேபோல், நியூசிலாந்து செல்லும் இந்திய அணியில் இருந்தும் பும்ராவுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது.  பும்ராவுக்கு பதிலாக முகம்மது சிராஜ் இந்திய அணியில் இடம் பிடித்துள்ளார். நியூசிலாந்துக்கு எதிரான  3 இருபது ஓவர் போட்டிக்கான இந்திய அணியில் சித்தார்த் கவுலும் இடம் பெற்றுள்ளார். 

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக மூன்று ஒருநாள் போட்டிகளில் இந்திய அணி விளையாடுகிறது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டி வரும் 12 ஆம் தேதி துவங்குகிறது. ஜனவரி 15 ஆம் தேதி 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியும், 18 ஆம் தேதி மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியும் நடைபெறுகிறது. 

அத்துடன் ஆஸ்திரேலிய பயணத்தை முடித்துக்கொண்டு நியூசிலாந்து செல்லும் இந்திய அணி, 5 ஒருநாள் கிரிக்கெட் போட்டி மற்றும் 3 இருபது ஓவர் போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாட உள்ளது. இதன்பிறகு, ஆஸ்திரேலிய அணி வரும் பிப்ரவரி மாதம் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 5 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 இருபது ஓவர் போட்டிகளில் விளையாடுகிறது. 

தொடர்புடைய செய்திகள்

1. இந்தியாவுக்கு நாடு கடத்தப்படுவதை தவிர்க்க பாஸ்போர்ட்டை ஒப்படைத்தார் மெகுல் சோக்சி
இந்தியாவுக்கு நாடு கடத்தப்படுவதை தவிர்க்கும் நோக்கில் இந்திய பாஸ்போர்ட்டை மெகுல் சோக்சி ஒப்படைத்துள்ளார்.
2. பிரச்சினைகளை தீர்க்க இந்தியாவும் பாகிஸ்தானும் பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும் : ஐநா
இந்தியாவும் பாகிஸ்தானும் தங்கள் பிரச்சினைகளை பேசித் தீர்த்துக்கொள்ள வேண்டும் என்று ஐநா தெரிவித்துள்ளது.
3. சீனாவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய ராணுவமும் எல்லையில் குவிப்பு
இந்திய–சீன எல்லையில் சீனா தனது ராணுவத்தை பலப்படுத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
4. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் இந்தியா வெற்றி: டோனி, புவனேஷ்வர்குமாருக்கு கேப்டன் விராட் கோலி பாராட்டு
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய டோனி, புவனேஷ்வர்குமார் ஆகியோரை கேப்டன் விராட்கோலி பாராட்டினார்.
5. ஆசிய கோப்பை கால்பந்து போட்டியில் இந்தியா-பக்ரைன் இன்று மோதல்
ஆசிய கோப்பை கால்பந்து போட்டியில் இந்தியா-பக்ரைன் அணிகள் இன்று மோத உள்ளன.