கிரிக்கெட்

கிரிக்கெட் சூதாட்டத் தரகர் சஞ்சீவ் சாவ்லாவை நாடு கடத்த உத்தரவு + "||" + India secures extradition of bookie Sanjeev Chawla

கிரிக்கெட் சூதாட்டத் தரகர் சஞ்சீவ் சாவ்லாவை நாடு கடத்த உத்தரவு

கிரிக்கெட் சூதாட்டத் தரகர் சஞ்சீவ் சாவ்லாவை நாடு கடத்த உத்தரவு
கிரிக்கெட் சூதாட்டத் தரகர் சஞ்சீவ் சாவ்லாவை இந்தியாவுக்கு நாடு கடத்த லண்டன் நீதிமன்றம் உத்தரவிட்டது.
லண்டன்,

 2000 ஆம் ஆண்டில் ஹன்சே குரோஞ்ச் தலைமையிலான தென்னாப்பிரிக்க அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடிய போது சூதாட்டம் நடந்ததாக புகார் எழுந்தது.

இதில் சூதாட்டத் தரகராக செயல்பட்டதாக டெல்லியை சேர்ந்த தொழிலதிபர் சஞ்சீவ் சாவ்லா மீது குற்றம் சாட்டப்பட்டது. இதை அடுத்து பிரிட்டன் தப்பிச் சென்ற அவர், அந்நாட்டு குடிமகன் ஆனார். அவரை நாடு கடத்த உத்தரவிடக் கோரி இந்திய அரசு சார்பில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த வெஸ்ட்மின்ஸ்டர்  நீதிமன்றம், சஞ்சீவ் சாவ்லாவை நாடு கடத்துமாறு உத்தரவிட்டுள்ளது.