கிரிக்கெட்

இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு ஊக்கத்தொகை அறிவிப்பு + "||" + Incentives Announcement to Indian cricketers

இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு ஊக்கத்தொகை அறிவிப்பு

இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு ஊக்கத்தொகை அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு ஊக்கத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி,

ஆஸ்திரேலிய மண்ணில் 71 ஆண்டுகளுக்கு பிறகு முதல்முறையாக டெஸ்ட் தொடரை கைப்பற்றி வரலாறு படைத்த விராட் கோலி தலைமையிலான இந்திய அணி வீரர்களுக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் ஊக்கத்தொகை அறிவித்துள்ளது. தற்போது டெஸ்ட் போட்டிக்கான கட்டணமாக இந்திய வீரர்களுக்கு ரூ.15 லட்சம் வழங்கப்படுகிறது. அதே அளவு தொகை ஊக்கப்பரிசாக அளிக்கப்படும் என்று கிரிக்கெட் வாரியம் கூறியுள்ளது.

அதாவது இந்த டெஸ்ட் தொடரில் ஆடும் லெவன் அணியில் இடம் பெற்று இருந்த வீரர்கள், ஒவ்வொரு டெஸ்டுக்கும் தலா ரூ.15 லட்சத்தை ஊக்கத்தொகையாக பெறுவார்கள். இதன்படி 4 டெஸ்டிலும் களம் கண்ட வீரர்களுக்கு மொத்தம் ரூ.60 லட்சம் கிடைக்கும். வெளியில் இருந்த மாற்று வீரர்களுக்கு ஒவ்வொரு போட்டிக்கும் தலா ரூ.7½ லட்சம் வீதம் வழங்கப்படும். இதே போல் பயிற்சியாளர்கள் (தலைமை பயிற்சியாளர் ரவிசாஸ்திரி, பேட்டிங் பயிற்சியாளர் சஞ்சய் பாங்கர், பந்து வீச்சு பயிற்சியாளர் பரத் அருண், பீல்டிங் பயிற்சியாளர் ஸ்ரீதர்) ஒவ்வொருவருக்கும் தலா ரூ.25 லட்சம் கொடுக்கப்படும். பயிற்சியாளர் அல்லாத அணியின் உதவியாளர்களுக்கு அவர்களது ஊதியம் போனசாக வழங்கப்படும்.