கிரிக்கெட்

ஆஸ்திரேலிய அணியின் இந்திய சுற்றுப்பயணம் அறிவிப்பு இரண்டு 20 ஓவர், 5 ஒரு நாள் போட்டிகளில் ஆடுகிறது + "||" + Australian team Indian tour announcement

ஆஸ்திரேலிய அணியின் இந்திய சுற்றுப்பயணம் அறிவிப்பு இரண்டு 20 ஓவர், 5 ஒரு நாள் போட்டிகளில் ஆடுகிறது

ஆஸ்திரேலிய அணியின் இந்திய சுற்றுப்பயணம் அறிவிப்பு இரண்டு 20 ஓவர், 5 ஒரு நாள் போட்டிகளில் ஆடுகிறது
ஆஸ்திரேலிய அணியின் இந்திய சுற்றுப்பயணம் அறிவிப்பு இரண்டு 20 ஓவர், 5 ஒரு நாள் போட்டிகளில் ஆடுகிறது, இதற்கான போட்டி அட்டவணையை இந்திய கிரிக்கெட் வாரியம் நேற்று வெளியிட்டது.
மும்பை,

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி பிப்ரவரி, மார்ச் மாதங்களில் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்டு 20 ஓவர் போட்டி மற்றும் 5 ஒரு நாள் போட்டிகளில் விளையாடுகிறது. இதற்கான போட்டி அட்டவணையை இந்திய கிரிக்கெட் வாரியம் நேற்று வெளியிட்டது.


இதன்படி முதலாவது 20 ஓவர் போட்டி பிப்.24-ந்தேதி பெங்களூருவிலும், 2-வது 20 ஓவர் போட்டி பிப்.27-ந்தேதி விசாகப்பட்டினத்திலும் நடக்கிறது. அதைத் தொடர்ந்து ஒரு நாள் போட்டிகள் ஐதராபாத் (மார்ச் 2,), நாக்பூர் (மார்ச் 5), ராஞ்சி (மார்ச் 8), மொகாலி (மார்ச் 10), டெல்லி (மார்ச் 13) ஆகிய இடங்களில் நடத்தப்படுகிறது. ஒரு நாள் போட்டிகள் பிற்பகல் 1.30 மணிக்கும், 20 ஓவர் போட்டி இரவு 7 மணிக்கும் தொடங்கும்.