கிரிக்கெட்

ராகுல்,பாண்ட்யாவின் கருத்தை இந்திய அணி ஆதரிக்கவில்லை: விராட் கோலி + "||" + Indian team doesn't support Pandya, Rahul comments on women: Kohli

ராகுல்,பாண்ட்யாவின் கருத்தை இந்திய அணி ஆதரிக்கவில்லை: விராட் கோலி

ராகுல்,பாண்ட்யாவின் கருத்தை இந்திய அணி ஆதரிக்கவில்லை: விராட் கோலி
ராகுல், பாண்ட்யாவின் கருத்தை இந்திய அணி ஆதரிக்கவில்லை என்று இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.
சிட்னி,

இந்தி சினிமா பட டைரக்டர் கரண் ஜோஹர் தொகுத்து வழங்கும் ‘காபி வித் கரண்’ டெலிவிஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா, பேட்ஸ்மேன் லோகேஷ் ராகுல் ஆகியோர் பெண்களுடன் ஊர் சுற்றுவது குறித்தும், செக்ஸ் பழக்க வழக்கம் குறித்தும் வெளிப்படையாக கூறிய சில விஷயங்கள் சர்ச்சையாக வெடித்தது. இருவரின் பேச்சுக்கும் சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பின.

இந்த விவகாரம் குறித்து 24 மணி நேரத்துக்குள் விளக்கம் அளிக்கும்படி இருவருக்கும் இந்திய கிரிக்கெட் வாரியம் நோட்டீஸ் அனுப்பியது. உடனடியாக டுவிட்டர் மூலம் வெளிப்படையாக மன்னிப்பு கோரிய ஹர்திக் பாண்ட்யா, தனது விளக்கத்திலும் நடந்த சம்பவத்துக்காக வருத்தம் தெரிவித்து இருந்தார். லோகேஷ் ராகுலும் தனது விளக்கத்தை இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு சமர்ப்பித்துள்ளார்.  இவர்கள் இருவருக்கும் 2 ஒருநாள் போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்படலாம் என தெரிகிறது.

இந்நிலையில், ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நாளை (சனிக்கிழமை) சிட்னியில் தொடங்குகிறது. இந்த போட்டிக்கு முன்னதாக கேப்டன் விராட் கோலி இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது விராட் கோலி கூறியதாவது:- உலகக் கோப்பைக்கு தயார் ஆவதில்தான் எங்களின் உடனடி கவனம் உள்ளது.  

பெண்கள் குறித்து லோகேஷ் ராகுல், ஹர்திக் பாண்ட்யா ஆகியோர் கூறியது அவர்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும். இந்த விஷயத்தில் கிரிக்கெட் வாரியத்தின் முடிவுக்காக காத்திருக்கிறோம். இந்திய கிரிக்கெட் அணியின் பார்வையில், இந்த அவசியமற்ற கருத்தை நாங்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டோம். இது குறித்து இருவரிடம் பேசப்பட்டு விட்டது. கிரிக்கெட் வாரியம் இந்த விவகாரத்தில் முடிவெடுத்த பிறகு, அந்த சூழலுக்கு ஏற்ப அணி முடிவு செய்யப்படும்” இவ்வாறு அவர் தெரிவித்தார். 

தொடர்புடைய செய்திகள்

1. கோவை ஐ.எஸ். ஆதரவாளர்களிடம் கிடைத்த தகவலின் அடிப்படையில் இலங்கைக்கு இந்தியா எச்சரிக்கை
கோவையில் கைது செய்யப்பட்ட ஐ.எஸ். ஆதரவாளர்களிடம் விசாரணையை மேற்கொண்ட போது கிடைத்த தகவலை கொண்டே இலங்கைக்கு இந்தியா பயங்கரவாத தாக்குதல் தொடர்பான எச்சரிக்கையை விடுத்துள்ளது. #SriLanka #SriLankaBlasts #NIA #India
2. அருணாசல பிரதேசத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்
வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான அருணாசல பிரதேசத்தில் இன்று அதிகாலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
3. ஈரான் விவகாரம்: இந்தியாவுக்கு சலுகையை நீட்டிக்க முடியாது - அமெரிக்கா அறிவிப்பால் எரிபொருள் தட்டுப்பாடு அபாயம்
ஈரானில் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்யும் விவகாரத்தில் இந்தியாவுக்கு சலுகையை நீட்டிக்க முடியாது என்ற அமெரிக்கா அறிவிப்பால் எரிபொருள் தட்டுப்பாடு அபாயம் ஏற்பட்டுள்ளது.
4. டோனி மீது மதிப்பும் நம்பிக்கையும் உள்ளது: விராட் கோலி நெகிழ்ச்சி
டோனி மீது மதிப்பும் நம்பிக்கையும் உள்ளது என்று இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.
5. இந்திய தேர்தலில் பிரசாரம் மேற்கொண்ட வங்கதேச நடிகர் மன்னிப்பு கோரினார்
இந்திய தேர்தலில் பிரசாரம் மேற்கொண்டதால் வெளியேற்றப்பட்ட வங்கதேச நடிகர் மன்னிப்பு கோரினார்.