கிரிக்கெட்

பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய பேச்சு; பாண்ட்யா, லோகேஷ் மீது ஹர்பஜன் சிங் கடும் காட்டம் + "||" + Harbhajan Singh slams Hardik Pandya, KL Rahul for jeopardising reputation of cricketers

பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய பேச்சு; பாண்ட்யா, லோகேஷ் மீது ஹர்பஜன் சிங் கடும் காட்டம்

பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய பேச்சு; பாண்ட்யா, லோகேஷ் மீது ஹர்பஜன் சிங் கடும் காட்டம்
எங்கள் நண்பர்களுடன் கூட நாங்கள் இப்படி பேச மாட்டோம். ஆனால் டெலிவி‌ஷன் நிகழ்ச்சியில் இப்படி பேசியுள்ளனர் என பாண்ட்யா, லோகேஷை ஹர்பஜன் சிங் கடுமையாக சாடியுள்ளார்.
டெலிவி‌ஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஹர்திக் பாண்ட்யா, லோகேஷ் ராகுல் ஆகியோர் பெண்களுடனான தங்களது பாலியல் பழக்கம் குறித்து வெளிப்படையாக கூறிய சில வி‌ஷயங்கள் சர்ச்சையாக கிளம்பியது.  கிரிக்கெட் வாரிய சட்டக்குழு நடவடிக்கையால்  அவர்கள் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான ஒருநாள் போட்டி தொடரை இழக்க வாய்ப்புள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. இருவரையும் விசாரணை முடியும் வரையில் சஸ்பெண்ட் செய்வதற்கு இந்திய கிரிக்கெட் வாரியத்தின் சட்டக்குழு வாய்ப்பு வழங்கியுள்ளது. விசாரணையை முடிக்க 6 மாத காலங்கள் வரையில் பிடிக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் இருவருடைய பேச்சுக்கு ஹர்பஜன் சிங் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். இதுதொடர்பாக ஹர்பஜன் சிங் பேசுகையில், இதுபோன்ற விஷயங்களை நண்பர்களுடன் கூட பேச மாட்டாம், ஆனால் அவர்கள் பலரும் பார்க்கும் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் இப்படி பேசியுள்ளனர். இப்போது மக்களின் நினைப்பு என்னவாக இருக்கும், ஹர்பஜன் இப்படித்தானோ, அனில் கும்ப்ளே, சச்சின் டெண்டுல்கர் இப்படித்தானோ என்றுதானே நினைப்பார்கள் என கடும் கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார். 

மேலும் பேசுகையில் பாண்ட்யா அணிக்குள் வந்து எத்தனை நாட்கள் ஆகின்றன? அவர் எப்படி அணி கலாச்சாரம் பற்றியெல்லாம் பேச முடியும். தடை செய்தது சரிதான். பிசிசிஐ நடவடிக்கை மிகவும் சரியானது. பிசிசிஐ கண்டிப்புடன் இருக்க வேண்டும்.  தடை விதிப்பு எதிர்பார்த்ததுதான், எனக்கு எந்தஒரு ஆச்சர்யமும் கிடையாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.