கிரிக்கெட்

பாகிஸ்தானுக்கு எதிரான கடைசி டெஸ்ட்: தென்ஆப்பிரிக்க அணி 262 ரன்னில் ஆல்-அவுட் + "||" + Last Test against Pakistan: South Africa are all out in 262 runs

பாகிஸ்தானுக்கு எதிரான கடைசி டெஸ்ட்: தென்ஆப்பிரிக்க அணி 262 ரன்னில் ஆல்-அவுட்

பாகிஸ்தானுக்கு எதிரான கடைசி டெஸ்ட்: தென்ஆப்பிரிக்க அணி 262 ரன்னில் ஆல்-அவுட்
பாகிஸ்தானுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில், தென்ஆப்பிரிக்க அணி 262 ரன்னில் ஆல்-அவுட் ஆனது.
ஜோகன்னஸ்பர்க்,

தென்ஆப்பிரிக்கா - பாகிஸ்தான் அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஜோகன்னஸ்பர்க்கில் நேற்று தொடங்கியது. இதில் ‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட் செய்த தென்ஆப்பிரிக்க அணி முதல் இன்னிங்சில் 77.4 ஓவர்களில் 262 ரன்கள் சேர்த்து ஆல்-அவுட் ஆனது. அந்த அணி கடைசி 33 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்தது குறிப்பிடத்தக்கது. அதிகபட்சமாக மார்க்ராம் 90 ரன்களும் (16 பவுண்டரி), டி புருன் 49 ரன்களும் எடுத்தனர். பாகிஸ்தான் தரப்பில் வேகப்பந்து வீச்சாளர்கள் பஹீம் அஷ்ரப் 3 விக்கெட்டுகளும், முகமது அமிர், ஹசன் அலி, முகமது அப்பாஸ் தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

பின்னர் தனது முதல் இன்னிங்சை ஆடிய பாகிஸ்தான் அணி ஆட்ட நேர முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 17 ரன்கள் எடுத்துள்ளது. இரண்டு விக்கெட்டுகளையும் வேகப்பந்து வீச்சாளர் பிலாண்டர் சாய்த்தார். 2-வது நாள் ஆட்டம் இன்று நடக்கிறது.தொடர்புடைய செய்திகள்

1. பாகிஸ்தான்: பேருந்து மீது லாரி மோதிய விபத்தில் 27 பேர் பலி
பாகிஸ்தானில் பேருந்து மீது லாரி மோதிய விபத்தில் 27 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
2. காஷ்மீர் எல்லையில் அத்துமீறிய பாகிஸ்தான் ராணுவத்திற்கு இந்திய வீரர்கள் பதிலடி
காஷ்மீர் எல்லையில் அத்துமீறிய பாகிஸ்தான் ராணுவத்திற்கு இந்திய வீரர்கள் பதிலடி கொடுத்தனர்.
3. துளிகள்
பாகிஸ்தான்-தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான ஒருநாள் போட்டி தொடரில், முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி போர்ட் எலிசபெத்தில் நேற்று நடந்தது.
4. பயங்கரவாத ஊடுருவலை தடுக்க இதுவரை எதுவும் செய்யவில்லை? இம்ரான்கான் நம்பகத்தன்மை உடையவரா?
பயங்கரவாத ஊடுருவலை தடுக்க இதுவரை எதுவும் செய்யவில்லை. இம்ரான்கான் நம்பகத்தன்மை உடையவரா? என்ற கேள்வி எழுந்து உள்ளது.
5. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் இந்தியா வெற்றி: டோனி, புவனேஷ்வர்குமாருக்கு கேப்டன் விராட் கோலி பாராட்டு
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய டோனி, புவனேஷ்வர்குமார் ஆகியோரை கேப்டன் விராட்கோலி பாராட்டினார்.