கிரிக்கெட்

இலங்கைக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட்டில் நியூசிலாந்து அணி வெற்றி + "||" + New Zealand team win over T20 against Sri Lanka

இலங்கைக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட்டில் நியூசிலாந்து அணி வெற்றி

இலங்கைக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட்டில் நியூசிலாந்து அணி வெற்றி
இலங்கைக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட்டில் நியூசிலாந்து அணி வெற்றிபெற்றது.
ஆக்லாந்து,

நியூசிலாந்து-இலங்கை அணிகள் இடையிலான ஒரே ஒரு 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஆக்லாந்தில் நேற்று நடந்தது. ‘டாஸ்’ ஜெயித்த இலங்கை அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. இதன்படி முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 55 ரன்களுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்தாலும், ராஸ் டெய்லர் (33 ரன்), பிரேஸ்வெல் (44 ரன்), குஜ்ஜெலிஜின் (ஆட்டம் இழக்காமல் 35 ரன்) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 179 ரன்கள் எடுத்து சவாலான ஸ்கோரை எட்டியது. அடுத்து களம் கண்ட இலங்கை அணி 16.5 ஓவர்களில் 144 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. இதனால் நியூசிலாந்து அணி 35 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக திசரா பெரேரா 43 ரன்கள் எடுத்தார். நியூசிலாந்து அணி தரப்பில் லோக்கி பெர்குசன், சோதி தலா 3 விக்கெட் வீழ்த்தினார்கள். ஏற்கனவே டெஸ்ட் (0-1) மற்றும் ஒருநாள் தொடரை (0-3) இழந்து இருந்த இலங்கை அணி ஒரு வெற்றி கூட பெறாமல் ஏமாற்றத்துடன் திரும்புகிறது.


தொடர்புடைய செய்திகள்

1. இலங்கை ரோந்து கப்பல் மோதி பலியான ராமநாதபுரம் மாவட்ட மீனவர் உடல் சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டது பொன்.ராதாகிருஷ்ணன்- கலெக்டர் அஞ்சலி
இலங்கை ரோந்து கப்பல் மோதியதில் கடலில் விழுந்து இறந்த ராமநாதபுரம் மாவட்ட மீனவர் உடல் சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.
2. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் இந்தியா வெற்றி: டோனி, புவனேஷ்வர்குமாருக்கு கேப்டன் விராட் கோலி பாராட்டு
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய டோனி, புவனேஷ்வர்குமார் ஆகியோரை கேப்டன் விராட்கோலி பாராட்டினார்.
3. தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி டெஸ்ட்: பாகிஸ்தான் அணிக்கு 381 ரன்கள் இலக்கு
தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணிக்கு 381 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
4. ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதலாவது ஒரு நாள் போட்டியில் இந்தியா தோல்வி - ரோகித் சர்மாவின் சதம் வீண்
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 34 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. ரோகித் சர்மா சதம் விளாசியும் பலன் இல்லை.
5. பாகிஸ்தானுக்கு எதிரான கடைசி டெஸ்ட்: தென்ஆப்பிரிக்க அணி 262 ரன்னில் ஆல்-அவுட்
பாகிஸ்தானுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில், தென்ஆப்பிரிக்க அணி 262 ரன்னில் ஆல்-அவுட் ஆனது.