கிரிக்கெட்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி: இந்திய அணி முதலில் பந்து வீச்சு + "||" + Retro-clad Australia seek throwback to fortunes

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி: இந்திய அணி முதலில் பந்து வீச்சு

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி: இந்திய அணி முதலில் பந்து வீச்சு
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி முதலில் பந்து வீசி வருகிறது.
சிட்னி,

விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இவ்விரு அணிகள் இடையே நடந்த 20 ஓவர் போட்டித் தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் முடிந்தது. அதைத் தொடர்ந்து நடந்த டெஸ்ட் தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் சொந்தமாக்கி புதிய வரலாறு படைத்தது

அடுத்ததாக 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் நடத்தப்படுகிறது. இதன்படி இந்தியா-ஆஸ்திரேலியா மோதும் முதலாவது ஒரு நாள் போட்டி சிட்னியில் இன்று  நடைபெற்று வருகிறது. இந்தப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஆரோன் பிஞ்ச் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதன்படி இந்திய அணி முதலில் பந்து வீசி வருகிறது. 

இரு அணிகளிலும் இடம் பெற்றுள்ள வீரர்கள் விவரம் வருமாறு:-

ஆஸ்திரேலியா, : - ஆரோன் பிஞ்ச் (கேப்டன்), அலெக்ஸ் கேரே (விக்கெட் கீப்பர்) உஸ்மான் காவ்ஜா, ஷான் மார்ஷ், பீட்டர் ஹேன்ட்ஸ்கோம்ப், மார்கஸ் ஸ்டாயின்ஸ், கிளென் மேக்ஸ்வெல், நாதன் லயன், பீட்டர் சிடில், ரிச்சர்டுசன், ஜேசன் பெஹெரண்டோர்ப், 

இந்தியா:-

ஷிகர் தவான், ரோகித் சர்மா, விராட் கோலி (கேப்டன்), அம்பத்தி ராயுடு, தினேஷ் கார்த்திக், எம்.எஸ். தோனி (விக்கெட் கீப்பர்) ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், புவனேஷ் குமார், முகம்மது சமி, கலீல் அகமது, 


தொடர்புடைய செய்திகள்

1. பாகிஸ்தானுடன் விளையாடுவது குறித்து மத்திய அரசு எடுக்கும் முடிவை மதிப்போம்: விராட் கோலி
பாகிஸ்தானுடன் விளையாடுவது குறித்து மத்திய அரசு எடுக்கும் முடிவை மதிப்போம் என்று விராட் கோலி தெரிவித்தார்.
2. இந்தியா -பாகிஸ்தான் இடையேயான தற்போதைய உறவு மிக மிக மோசமாக உள்ளது : டொனால்டு டிரம்ப்
இந்தியா -பாகிஸ்தான் இடையேயான தற்போதைய உறவு மிக மிக மோசமாக உள்ளது என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்தார்.
3. உலக கோப்பை போட்டியிலிருந்து பாகிஸ்தானை வெளியேற்றுங்கள்; வலுக்கும் கோரிக்கை
உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இருந்து பாகிஸ்தானை வெளியேற்ற வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.
4. தெலுங்கானாவை சேர்ந்தவர் அமெரிக்காவில் சுட்டுக்கொலை
தெலுங்கானாவை சேர்ந்த கோவர்தன் ரெட்டி என்பவர் அமெரிக்காவில் மர்ம நபரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
5. பாகிஸ்தானுடன் கிரிக்கெட் விளையாட தடை கோருவது நியாயமான கோரிக்கைதான் - ரவிசங்கர் பிரசாத்
பாகிஸ்தானுடன் கிரிக்கெட் விளையாட தடை கோருவது நியாயமான கோரிக்கைதான் என்று மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறியுள்ளார்.