கிரிக்கெட்

இந்தியாவிற்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி ஆஸ்திரேலியா 3 விக்கெட் இழப்பிற்கு 164 ரன்கள் + "||" + Usman Khawaja, Shaun Marsh take Australia past 100

இந்தியாவிற்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி ஆஸ்திரேலியா 3 விக்கெட் இழப்பிற்கு 164 ரன்கள்

இந்தியாவிற்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி ஆஸ்திரேலியா 3 விக்கெட் இழப்பிற்கு 164 ரன்கள்
இந்தியாவிற்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி ஆஸ்திரேலியா 3 விக்கெட் இழப்பிற்கு 164 ரன்கள் எடுத்து தடுமாறி வருகிறது.
சிட்னி

இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான முதல் ஒருநாள் போட்டி சிட்னியில் இன்று காலை இந்திய நேரப்படி 7.50 மணிக்கு தொடங்கியது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்து ஆடி வருகிறது.

தொடக்க வீரர்களாக ஆரோன் ஃபிஞ்சும், அலெக்ஸ் கேரியும் களமிறங்கினர். தொடக்க ஜோடியை மூன்றாவது ஓவரிலேயே பிரித்தார் புவனேஷ்வர் குமார். மூன்றாவது ஓவரில் ஆரோன் ஃபிஞ்சை கிளீன் போல்டாக்கினார் புவனேஷ்வர் குமார். கேப்டன் ஃபிஞ்ச் 6 ரன்களில் வெளியேற, கேரியுடன், உஸ்மான் கவாஜா ஜோடி சேர்ந்தார்.

இந்த ஜோடி 8 ஓவர்கள் நிலைத்தது. 5 பவுண்டரிகள் அடித்து அருமையாக ஆடிவந்த கேரியை புவனேஷ்வர் குமார் - கலீல் அகமது வேகப்பந்து கூட்டணியால் வீழ்த்த முடியவில்லை. இதையடுத்து 10-வது ஓவரை குல்தீப் யாதவிடம் கொடுத்தார் கேப்டன் கோலி. அதன் பலனாக, பந்துவீச வந்த முதல் ஓவரிலேயே அலெக்ஸ் கேரியின் விக்கெட்டை வீழ்த்தினார் குல்தீப் யாதவ். குல்தீப் வீசிய பந்தில் கேரி கொடுத்த கேட்ச்சை ஸ்லிப்பில் நின்ற ரோஹித் சர்மா அருமையாக பிடித்தார்.

இதையடுத்து கவாஜாவுடன் ஷான் மார்ஷ் ஜோடி சேர்ந்தார். , உஸ்மான் கவாஜா ஜடேஜா பந்தில் எல்பிடபிள்யூ ஆனார். தொடர்ந்து ஹேண்ட்ஸ்காம்ப் களம் இறங்கினார். ஆஸ்திரேலியா 34.2 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு  164 ரன்கள் எடுத்து உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. ஆஸ்திரேலியாவுடனான ஒருநாள் போட்டி: இந்தியா வரலாற்று வெற்றி தொடரை கைப்பற்றியது
ஆஸ்திரேலியாவுடனான ஒருநாள் போட்டி தொடர் மற்றும் டெஸ்ட் தொடரை கைப்பற்றி இந்திய அணி சாதனை புரிந்து உள்ளது.
2. சாதனைகளின் தலைவன் விராட் கோலி -முன்னாள் ஜாம்பவான்கள் பாராட்டு
சாதனைகளின் தலைவன் விராட் கோலி என முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவான்கள் பாராட்டி உள்ளனர்.
3. ஒருநாள் போட்டியில் 10 ஆயிரம் ரன்களை கடந்து டோனி சாதனை
ஒருநாள் போட்டியில் 10 ஆயிரம் ரன்களை கடந்த 5-வது வீரர் மகேந்திர சிங் டோனி என்ற பெருமையை பெற்றார்.
4. ”போட்டி முடிந்ததும் ஊருக்கு போயிறாத, வீட்டுக்கு வந்து என் குழந்தைகளை பாத்துக்கோ” ரிஷப் பண்டிற்கு ஆஸி கேப்டன் மனைவி அழைப்பு
இந்திய அணியின் இளம் வீரர் ரிஷப் பண்டிற்கு நேரமிருந்தால் குழந்தைகளை பார்த்துக்கொள்ள வருமாறு ஆஸ்திரேலிய கேப்டனின் மனைவி இன்ஸ்டாகிராமில் அழைப்பு விடுத்துள்ளார்.
5. தூக்கத்தில் இருந்த நண்பரின் காதலியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த கிரிக்கெட் வீரர்
தூக்கத்தில் இருந்த நண்பரின் காதலியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த கிரிக்கெட் வீரர் மீது விசாரணை நடைபெற்று வருகிறது.