கிரிக்கெட்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட்: இந்தியா திணறல் + "||" + India struggling early in chase of 289

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட்: இந்தியா திணறல்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட்:  இந்தியா திணறல்
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி முன்னணி விக்கெட்டுகளை பறிகொடுத்து தடுமாறி வருகிறது.
சிட்னி,

இந்தியா- ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி சிட்னியில் இன்று நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 288 ரன்கள் சேர்த்தது. இதையடுத்து, 289 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய இந்திய அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி அளிப்பதாய் அமைந்தது. 

தொடக்க ஆட்டகாரரான ஷிகர் தவானை எல்பிடபிள்யூ முறையில் ஜேசன் பெரண்டார்ப் வெளியேற்றினார். அடுத்து வந்த கேப்டன் விராட் கோலி (8 பந்துகளில் 3 ரன்கள்) எடுத்த நிலையில் ரிச்சர்ட்சன் 3.3 ஓவரில் ஸ்டாயின்சிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். பின்னர் வந்த அம்பதி ராயுடுவும் ரன் எதுவும் இன்றி வந்த வேகத்தில் வெளியேறினார். இந்திய அணி 3.5 ஓவர்களில் 4 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை பறிகொடுத்து திணறியது.  அதன்பின்னர் துவக்க ஆட்டக்க்காரர்  ரோகித் சர்மாவுடன் அனுபவம் மிக்க டோனி ஜோடி சேர்ந்தார். 

இந்த ஜோடி நிதானமாகவும் மிகவும் கவனத்துடனும் விளையாடி வருகிறது. இதனால், இந்திய அணியின் ரன் வேகம் ஆமை வேகத்தில் சென்று கொண்டிருக்கிறது. 16 ஓவர்கள் நிலவரப்படி இந்திய அணி 3 விக்கெட்  இழப்புக்கு 47 ரன்கள் சேர்த்துள்ளது. 43 பந்துகளை சந்தித்துள்ள ரோகித் சர்மா 23 ரன்களிலும், டோனி 43 பந்துகளில் 13 ரன்களும் எடுத்து விளையாடி வருகின்றனர். இந்திய அணியின் ரன் வேகம் ஒரு ஓவருக்கு சராசரியாக 2.94 ஆக உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. இலங்கை தொடர் குண்டு வெடிப்பில் 10 இந்தியர்கள் உயிரிழப்பு - சுஷ்மா சுவராஜ்
இலங்கை தொடர் குண்டு வெடிப்பில் 10 இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர் என சுஷ்மா சுவராஜ் தகவல் தெரிவித்துள்ளார்.
2. புல்வாமா தாக்குதலில் தொடர்புடைய மொத்த ஜெய்ஷ் பயங்கரவாதிகளும் வேட்டை
புல்வாமா தாக்குதலில் தொடர்புடைய மொத்த ஜெய்ஷ் பயங்கரவாதிகளும் வேட்டையாடப்பட்டனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
3. இலங்கை கடல் எல்லையில் இந்திய கடலோர காவல் படையினர் உஷார்
இலங்கை கடல் எல்லையில் இந்திய கடலோர காவல்படை உஷார் நிலையில் ரோந்து பணியை மேற்கொள்கிறது.
4. இலங்கையில் தொடர்ந்து தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் சதித்திட்டம் - அமெரிக்கா எச்சரிக்கை
இலங்கையில் தொடர்ந்து தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் சதித்திட்டம் தீட்டியுள்ளனர் என அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.
5. இலங்கையில் 8 இடங்களில் நடந்த குண்டுவெடிப்பில் 3 இந்தியர்கள் உயிரிழப்பு
இலங்கையில் 8 இடங்களில் நடந்த குண்டுவெடிப்பில் 3 இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர்.