கிரிக்கெட்

முழங்கை காயத்தால் பின்னடைவை சந்திக்கும் ஸ்டீவன் சுமித் - ஐ.பி.எல். போட்டியில் விளையாட முடியாது + "||" + Steven Smith meets the knee injury - IPL Can not play in the match

முழங்கை காயத்தால் பின்னடைவை சந்திக்கும் ஸ்டீவன் சுமித் - ஐ.பி.எல். போட்டியில் விளையாட முடியாது

முழங்கை காயத்தால் பின்னடைவை சந்திக்கும் ஸ்டீவன் சுமித் - ஐ.பி.எல். போட்டியில் விளையாட முடியாது
முழங்கை காயத்தால் பின்னடைவை சந்தித்துள்ள ஸ்டீவன் சுமித், ஐ.பி.எல். போட்டியில் விளையாட முடியாது என தகவல் வெளியாகி உள்ளது.
சிட்னி, 

கடந்த ஆண்டு மார்ச் மாதம் நடந்த தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் சிக்கிய அப்போதைய ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்டீவன் சுமித்துக்கு அந்த நாட்டு கிரிக்கெட் வாரியம் ஒரு ஆண்டு விளையாட தடை விதித்தது. அவரது தடைகாலம் வருகிற மார்ச் மாதத்துடன் முடிவடைகிறது. இதனால் அவர் மே மாதம் 30-ந் தேதி இங்கிலாந்தில் தொடங்கும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான ஆஸ்திரேலிய அணியில் இடம் பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் வங்காளதேச பிரிமீயர் லீக் போட்டியில் பங்கேற்ற ஸ்டீவன் சுமித்துக்கு வலது முழங்கையில் காயம் ஏற்பட்டது. இதனால் அவர் வங்காளதேசத்தில் இருந்து நாடு திரும்ப ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் பணித்து இருக்கிறது. அவரது காயத்துக்கு நாளை மறுதினம் ஆபரேஷன் செய்யப்பட இருக்கிறது. இதனால் அவர் குறைந்தது 6 வார காலம் கிரிக்கெட் விளையாட முடியாது. எனவே உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான ஆஸ்திரேலிய அணியில் ஸ்டீவன் சுமித் இடம் பிடிப்பதில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அதேநேரத்தில் உலக கோப்பை போட்டிக்கு முன்னதாக நடக்கும் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் ஸ்டீவன் சுமித் (ராஜஸ்தான் ராயல்ஸ் அணி) விளையாட முடியாது என்று தெரிகிறது.


தொடர்புடைய செய்திகள்

1. துளிகள்
முழங்கை காயத்துக்கு ஆபரேஷன் செய்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஸ்டீவன் சுமித் மீண்டும் பயிற்சியை தொடங்கியுள்ளார்.