கிரிக்கெட்

பெண்கள் சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட்டில் 14 ரன்னில் சுருண்ட சீனா + "||" + In Women's International 20 Over cricket China stuck in 14 runs

பெண்கள் சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட்டில் 14 ரன்னில் சுருண்ட சீனா

பெண்கள் சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட்டில் 14 ரன்னில் சுருண்ட சீனா
பெண்கள் சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட்டில் 14 ரன்னில் சீனா அணி சுருண்டது.
பாங்காங்,

14 அணிகள் இடையிலான பெண்களுக்கான சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட் தொடர் தாய்லாந்தில் நடந்து வருகிறது. இதில் பாங்காங்கில் நேற்று நடந்த ஆட்டம் ஒன்றில் (பி பிரிவு) ஐக்கிய அரபு அமீரக அணி, சீனாவுடன் மோதியது.

முதலில் பேட் செய்த ஐக்கிய அரபு அமீரக அணி 3 விக்கெட் இழப்புக்கு 203 ரன்கள் குவித்தது. அடுத்து களம் இறங்கிய அனுபவம் இல்லாத சீனா அணி, அமீரகத்தின் பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் 10 ஓவர்களில் வெறும் 14 ரன்னில் சுருண்டது. அந்த அணியில் ஒருவர் கூட இரட்டை இலக்கத்தை தொடவில்லை. 6 வீராங்கனைகள் டக்-அவுட் ஆனார்கள். இதில் இரண்டு எக்ஸ்டிரா ரன்னும் அடங்கும்.

சர்வதேச பெண்கள் 20 ஓவர் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு அணியின் குறைந்த ஸ்கோர் இது தான். அதே சமயம் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு 189 ரன்கள் வித்தியாசத்தில் கிடைத்த வெற்றி, மிகப்பெரிய வெற்றியாக பதிவானது.