கிரிக்கெட்

அடிலெய்டு: இந்திய அணி வீரர்கள் தீவிர வலைப்பயிற்சி + "||" + Adelaide: Team India at a practice session ahead of second ODI against Australia

அடிலெய்டு: இந்திய அணி வீரர்கள் தீவிர வலைப்பயிற்சி

அடிலெய்டு: இந்திய அணி வீரர்கள் தீவிர வலைப்பயிற்சி
அடிலெய்ட்டில் நாளை 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி நடைபெற உள்ள நிலையில், இந்திய அணி வீரர்கள் தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
அடிலெய்டு,

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வரும் இந்திய கிரிக்கெட் அணி, அந்நாட்டுக்கு எதிராக 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 34 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியதால், இந்திய அணி இந்த தொடரில் 0-1 என்ற கணக்கில் பின் தங்கியுள்ளது. 

இந்த நிலையில், இவ்விரு அணிகளுக்கு இடையேயான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி நாளை (15 ஆம் தேதி) நடைபெறுகிறது. இப்போட்டியில் கட்டாயம் வெற்றி பெற வேண்டும் என்ற நிலையில் இந்திய அணி உள்ளது. அதேசமயத்தில், 2-வது ஒருநாள் போட்டியையும் வென்று தொடரைக் கைப்பற்றும் முனைப்பில் ஆஸ்திரேலிய அணி உள்ளது. இந்திய அணி வாழ்வா? சாவா? கட்டத்தில் உள்ள நிலையில், இந்திய அணி வீரர்கள் இன்று தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டனர்.  முன்னதாக, வலைப்பயிற்சியில் ஈடுபட வரும் இந்திய வீரர்களைக் காண ரசிகர்கள் அங்கு ஏராளமானோர் திரண்டனர். ரசிகர்கள், கேப்டன் கோலி உள்ளிட்ட வீரர்களிடம் ஆர்வமுடன் செல்பி மற்றும் ஆட்டோகிராப் பெற்றுக்கொண்டனர்.