கிரிக்கெட்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஆடாதது ஏன்? புவனேஷ்வர்குமார் விளக்கம் + "||" + Why not play against Australia in Test series

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஆடாதது ஏன்? புவனேஷ்வர்குமார் விளக்கம்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஆடாதது ஏன்? புவனேஷ்வர்குமார் விளக்கம்
இந்திய அணியில் இடம் பிடித்து இருந்த வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார் ஒரு ஆட்டத்தில் கூட களம் இறங்கவில்லை.
அடிலெய்டு, 

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் போட்டி தொடருக்கான இந்திய அணியில் இடம் பிடித்து இருந்த வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார் ஒரு ஆட்டத்தில் கூட களம் இறங்கவில்லை. டெஸ்ட் தொடரில் விளையாடாதது ஏன்? என்பது குறித்து புவனேஷ்வர்குமார் விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக அவர் அளித்த ஒரு பேட்டியில், ‘தொடர்ச்சியாக போட்டியில் விளையாடவில்லை என்றால் எனது இயல்பான பந்து வீச்சில் பாதிப்பை ஏற்படுத்தும். போட்டியில் பந்து வீசுவதற்கும், வலைப்பயிற்சியில் பந்து வீசுவதற்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது. வலைப்பயிற்சியில் எனது இயல்பான பந்து வீச்சுக்கு திரும்ப எல்லா வகையிலும் முயற்சித்தேன். கடந்த ஒருநாள் போட்டியில் நான் சிறப்பாக பந்து வீசவில்லை. அதேநேரத்தில் மோசமாகவும் பந்து வீசவில்லை. ஆட்டம் போகப்போக எனது பந்து வீச்சில் முன்னேற்றம் ஏற்படும். ஒருநாள் போட்டியில் மட்டுமே பந்து வீச வேண்டும் என்று நான் பயிற்சியில் ஈடுபடவில்லை. டெஸ்ட் போட்டியிலும் பந்து வீச வேண்டும் என்று தான் பயிற்சியில் ஈடுபட்டேன். நான் இயல்பான பந்து வீச்சுக்கு திரும்ப காயம் இல்லாமல் இருக்க வேண்டியது முக்கியமானதாகும். டெஸ்ட் போட்டி தொடரின் போது நான் நல்ல உடல் தகுதியுடன் தான் இருந்தேன். ஆனால் 100 சதவீத உடல் தகுதியுடன் இருந்தேனா? என்றால் நிச்சயமாக சொல்ல முடியாது. 5 நாட்கள் கொண்ட டெஸ்ட் போட்டியில் என்னால் முழுமையாக ஈடுபட முடியுமா? என்று தெரியவில்லை. அதனால் நான் டெஸ்ட் போட்டியில் விளையாடவில்லை. நல்ல விஷயம் என்னவென்றால் நம்மிடம் திறமையான பந்து வீச்சாளர்கள் உள்ளனர். தற்போது நான் முழு உடல் தகுதியுடன் உள்ளேன். ஆனால் டெஸ்ட் போட்டி நேரத்தில் என்னால் இப்படி சொல்ல முடியவில்லை. கடந்த ஒரு மாத காலமாக கடினமாக உழைத்ததால் என்னால் மீண்டும் 130 முதல் 135 கிலோ மீட்டர் வேகத்தில் பந்து வீச முடிகிறது’ என்று தெரிவித்தார்.