கிரிக்கெட்

இந்தியாவிற்க்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியே பேட்டிங் + "||" + Australian batting in the second ODI against India

இந்தியாவிற்க்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியே பேட்டிங்

இந்தியாவிற்க்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியே பேட்டிங்
இந்தியாவிற்க்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
அடிலெய்டு, 

விராட்கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இவ்விரு அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரில் சிட்னியில் நடந்த முதலாவது போட்டியில் ஆஸ்திரேலிய அணி 34 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த நிலையில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று (செவ்வாய்க்கிழமை) அடிலெய்டில் தொடங்கியது.

முதல் போட்டியில் தோல்வியை சந்தித்ததால், இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற வேண்டிய கட்டாயம் இந்திய அணிக்கு ஏற்பட்டுள்ளது. இந்த ஆட்டம் இந்திய அணிக்கு வாழ்வா-சாவா? போராட்டமாகும். இந்த ஆட்டத்தில் வெற்றி பெறாவிட்டால் தொடரை இழக்க நேரிடும் என்பதால் இந்திய அணியினர் வெற்றிக்காக கடுமையாக போராடுவார்கள். அதே நேரத்தில் இந்த போட்டியில் வெற்றி பெற்றால் தொடரை கைப்பற்றி விடலாம் என்பதால் ஆஸ்திரேலிய அணி வெற்றிக்காக எல்லா வகையிலும் வரிந்து கட்டும். எனவே இன்றைய ஆட்டத்தில் அனல் பறக்கும் என்பதில் சந்தேகமில்லை.

இந்நிலையில். டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பேட்டிங்கை தேர்வு செய்து ஆடி வருகிறது.