கிரிக்கெட்

இந்தியாவிற்கு ஆஸ்திரேலியே அணி 299 ரன்கள் இலக்கு + "||" + Australia's 299 runs target for India

இந்தியாவிற்கு ஆஸ்திரேலியே அணி 299 ரன்கள் இலக்கு

இந்தியாவிற்கு ஆஸ்திரேலியே அணி 299 ரன்கள் இலக்கு
இந்தியாவிற்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியா அணி, இந்தியாவிற்கு 299 ரன் இலக்கு நிர்ணயித்து உள்ளது.
அடிலெய்டு, 

இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று  அடிலெய்டில் தொடங்கியது.

டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.ஆஸ்திரேலியா அணி 9 விக்கெட் இழப்பிற்கு 298 ரன் எடுத்தது. ஆஸ்திரேலியா அணியில் அதிகபட்சமாக ஷான் மார்ஷ்  131 (123) ரன்களும், மேக்ஸ்வெல் 48 (37) ரன்களும் எடுத்தனர்.

இந்தியா தரப்பில் அதிகபட்சமாக புவனேஷ்வர்குமார் 4 விக்கெட்டும், முகமது ஷமி 3 விக்கெட்டும், ,ரவீந்திர ஜடேஜா 1 விக்கெட்டும் எடுத்தனர்.