கிரிக்கெட்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது ஒரு நாள் போட்டி; விராட் கோலி சதம் விளாசல் + "||" + 2nd ODI against Australia; Virat Kohli hit hundred

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது ஒரு நாள் போட்டி; விராட் கோலி சதம் விளாசல்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது ஒரு நாள் போட்டி; விராட் கோலி சதம் விளாசல்
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது ஒரு நாள் போட்டியில் விராட் கோலி சதம் விளாசியுள்ளார்.
அடிலெய்டு, 

இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 2வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி இன்று அடிலெய்டில் தொடங்கியது.

டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.  ஆஸ்திரேலிய அணி 9 விக்கெட் இழப்பிற்கு 298 ரன்கள் எடுத்தது. ஆஸ்திரேலிய அணியில் அதிகபட்சமாக ஷான் மார்ஷ் 131 (123) ரன்களும், மேக்ஸ்வெல் 48 (37) ரன்களும் எடுத்தனர்.

இதனை தொடர்ந்து இந்திய அணி 299 ரன்கள் வெற்றி இலக்குடன் விளையாட தொடங்கியது.  இதில் இந்திய அணி 42வது ஓவரின் முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 228 ரன்கள் எடுத்திருந்தது.  இந்திய அணியின் கேப்டன் கோலி 99 ரன்களும், தோனி 17 ரன்களும் எடுத்திருந்தனர்.

இந்த நிலையில், விராட் கோலி தனது 39வது சதத்தினை பூர்த்தி செய்துள்ளார்.  அவர் 42.1வது ஓவரில் 101 (108 பந்துகள் 5 பவுண்டரிகள், 2 சிக்சர்கள்) ரன்கள் எடுத்துள்ளார்.  இது, ஒரு நாள் போட்டிகளில் ஆஸ்திரேலியா நாட்டில் அவரது 5வது சதம்.  ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அவர் அடித்துள்ள 6வது சதம்.

இந்திய அணி 2வது பேட்டிங் செய்யும்பொழுது (சேசிங்) கோலி எடுத்துள்ள 24வது சதம் இதுவாகும்.  சர்வதேச அளவிலான சதம் அடித்தவர்கள் பட்டியலில் சச்சின் தெண்டுல்கர் (100 சதம்), ரிக்கி பாண்டிங் (71 சதம்) ஆகியோருக்கு அடுத்து கோலி (64 சதம்) 3வது இடத்தில் உள்ளார்.

தொடர்ந்து இந்திய அணி வெற்றி இலக்கை நோக்கி விளையாடி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

1. பாகிஸ்தானுடன் விளையாடுவது குறித்து மத்திய அரசு எடுக்கும் முடிவை மதிப்போம்: விராட் கோலி
பாகிஸ்தானுடன் விளையாடுவது குறித்து மத்திய அரசு எடுக்கும் முடிவை மதிப்போம் என்று விராட் கோலி தெரிவித்தார்.
2. புதிய வரலாறு படைத்தார் விராட் கோலி ! ஐசிசியின் 3 கவுரவ விருதுகளை பெற்றார்
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) இன்று அறிவித்த சிறந்த ஒருநாள் அணி, டெஸ்ட் அணி ஆகியவற்றுக்கு கேப்டனாக இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி நியமிக்கப்பட்டுள்ளார்.
3. ராகுல்,பாண்ட்யாவின் கருத்தை இந்திய அணி ஆதரிக்கவில்லை: விராட் கோலி
ராகுல், பாண்ட்யாவின் கருத்தை இந்திய அணி ஆதரிக்கவில்லை என்று இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.
4. என்னுடைய மிகப்பெரிய சாதனை : இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரை வென்றது என்னுடைய மிகப்பெரிய சாதனை என்று விராட் கோலி தெரிவித்துள்ளார்.
5. மெல்போர்ன் டெஸ்ட்: முதல் நாளில் இந்திய அணி சிறப்பான ஆட்டம்
இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல்நாள் ஆட்டநேர முடிவில் இந்தியா 2 விக்கெட் இழப்புக்கு 215 ரன்கள் சேர்த்துள்ளது.