கிரிக்கெட்

இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் பங்கேற்கும் நியூசிலாந்து அணி அறிவிப்பு + "||" + New Zealand vs India: New Zealand name 14-member ODI squad to face India

இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் பங்கேற்கும் நியூசிலாந்து அணி அறிவிப்பு

இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் பங்கேற்கும் நியூசிலாந்து அணி அறிவிப்பு
இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டித்தொடரில் பங்கேற்கும் நியூசிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆக்லாண்டு,

ஆஸ்திரலியாவுக்கு எதிரான தொடர் முடிந்ததும், இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. நியூசிலாந்து செல்லும் இந்திய அணி அந்நாட்டு அணியுடன் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர், 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் ஆகியவற்றில் விளையாட உள்ளது. முதல் ஆட்டம் நேப்பியரில் வரும் புதன்கிழமை( 23 ஆம் தேதி)  நடைபெற உள்ளது. இந்தியாவுக்கு எதிரான தொடரில் நியூசிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. 14 பேர் கொண்ட வீரர்கள் விவரம் வருமாறு:-

கேன் வில்லியம்ஸன்(கேப்டன்), டிரன்ட் போல்ட், டாக் பிரேஸ்வெல், கோலின் டி கிராண்ட்ஹோம், லாக்கி பெர்குஷன், மார்டின் கப்தில், மாட் ஹென்ரி, டாம் லதாம், கோலின் முன்ரோ, ஹென்ரி நிகோலஸ், மிட்ஷெல் சான்ட்னர், இஷ் சோதி, டிம் சவுதி, ரோஸ் டெய்லர்

நியூசிலந்து தொடரில் பங்கேற்கும் இந்திய அணி வீரர்கள் விவரம்: விராட் கோலி  (கேப்டன்), ஷிகர் தவான், ரோகித் சர்மா, அம்பத்தி ராயுடு, தினேஷ் கார்த்திக், கேதர் ஜாதவ், எம்.எஸ் தோனி, குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சஹால், ரவீந்தர ஜடேஜா, புவனேஷ்குமார், முகம்மது சிராஜ், கலீல் அகமது, முகம்மது சமி, விஜய் சங்கர், சுப்மன் கில்