கிரிக்கெட்

மெல்போர்ன் கிரிக்கெட்: இந்தியாவுக்கு 231 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது ஆஸ்திரேலியா + "||" + Chahal's career-best restricts Australia to 230

மெல்போர்ன் கிரிக்கெட்: இந்தியாவுக்கு 231 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது ஆஸ்திரேலியா

மெல்போர்ன் கிரிக்கெட்: இந்தியாவுக்கு 231 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது ஆஸ்திரேலியா
மெல்போர்னில் நடைபெற்று வரும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணிக்கு வெற்றி இலக்காக 231 ரன்களை ஆஸ்திரேலிய அணி நிர்ணயித்துள்ளது.
மெல்போர்ன்,

விராட்கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரில் சிட்னியில் நடந்த முதலாவது ஆட்டத்தில் 34 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணியும், அடிலெய்டில் நடந்த 2-வது ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியும் வெற்றி பெற்றன. இதனால் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.

இந்த நிலையில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று (வெள்ளிக்கிழமை) மெல்போர்னில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, ஆஸ்திரேலியாவை பேட் செய்யுமாறு பணித்தார். இதன்படி இந்திய அணி முதலில் பந்து வீசியது. இந்திய அணியில், அம்பத்தி ராயுடு, முகம்மது சிராஜ், குல்தீப் யாதவ் கழற்றி விடப்பட்டுள்ளனர். அவர்களுக்கு பதிலாக தமிழக வீரர் விஜய்சங்கர், கேதர் ஜாதவ், சாஹல் ஆகியோர் அணியில் இடம் பிடித்துள்ளனர். 

தொடரை நிர்ணயிக்கும் இந்தப்போட்டியில், ஆஸ்திரேலிய அணிக்கு தொடக்கமே அதிர்ச்சி காத்திருந்தது. அலெக்ஸ் கேரி (5 ரன்கள்) புவனேஷ் குமார் பந்தில் ஆட்டமிழந்தார். கேப்டன் பிஞ்ச் 14 ரன்களில் வெளியேறினார்.  உஸ்மான் காவ்ஜா (34 ரன்கள்), ஷான் மார்ஷ் ( 39 ரன்கள்), ஹேன்ட்ஸ்கோம்ப் ( 58 ரன்கள்) ஆகியோர் சீரான இடைவெளியில் சாஹல் சுழலில் சிக்கினர். 

பின்னர் வந்த வீரர்கள், சொல்லிக்கொள்ளும்படி பெரிய அளவில் விளையாடவில்லை. சாஹல்  தொடர்ந்து, சுழலில் ஆதிக்கம் செலுத்த ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினர். 48.4 ஓவர்கள் தாக்குப்பிடித்த ஆஸ்திரேலிய அணி 230 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்திய அணி தரப்பில், சாஹல் 6 விக்கெட்டுகளையும், முகம்மது சமி, புவனேஷ் குமார் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதையடுத்து, 231 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி பேட்டிங் செய்து வருகிறது. 

தொடர்புடைய செய்திகள்

1. இந்தியா-ஆஸ்திரேலியா மோதும் முதலாவது 20 ஓவர் கிரிக்கெட்: விசாகப்பட்டினத்தில் இன்று நடக்கிறது
இந்தியா-ஆஸ்திரேலியா மோதும் முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி விசாகப்பட்டினத்தில் இன்று நடக்கிறது.
2. பாகிஸ்தானுடன் விளையாடுவது குறித்து இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை: இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாக கமிட்டி தலைவர் பேட்டி
உலக கோப்பை கிரிக்கெட்டில் பாகிஸ்தானுடன் விளையாடுவது குறித்து இன்னும் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று இந்திய கிரிக்கெட் வாரியத்தின் நிர்வாக கமிட்டி தலைவர் வினோத் ராய் தெரிவித்தார்.
3. இந்தியா-இங்கிலாந்து பெண்கள் அணிகள் மோதும் ஒரு நாள் கிரிக்கெட் மும்பையில் இன்று நடக்கிறது
இந்தியா-இங்கிலாந்து பெண்கள் அணிகள் இடையிலான முதலாவது ஒரு நாள் போட்டி மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் இன்று காலை 9 மணிக்கு தொடங்கி நடக்கிறது.
4. இந்தியாவில் சவுதி அரேபியா ரூ.7¼ லட்சம் கோடி முதலீடு - பிரதமர் மோடி வரவேற்பு
இந்தியாவில் சவுதி அரேபியா ரூ.7¼ லட்சம் கோடி முதலீடு செய்வதாக அறிவித்துள்ளது. இதை பிரதமர் மோடி வரவேற்றுள்ளார்.
5. பாகிஸ்தானிலிருந்து இந்தியாவிற்குள் ஊடுருவிய பெண் துப்பாக்கி சூட்டில் காயம்
பஞ்சாப் மாநிலத்தில் பாகிஸ்தானிலிருந்து இந்தியாவிற்குள் ஊடுருவிய பெண் துப்பாக்கி சூட்டில் காயம் அடைந்துள்ளார்.