கிரிக்கெட்

ஆஸ்திரேலியாவுடனான ஒருநாள் போட்டி: இந்தியா வரலாற்று வெற்றி தொடரை கைப்பற்றியது + "||" + India has done it! First bilateral series win in Australia for them as msdhoni guided the visitors to a 7-wicket win

ஆஸ்திரேலியாவுடனான ஒருநாள் போட்டி: இந்தியா வரலாற்று வெற்றி தொடரை கைப்பற்றியது

ஆஸ்திரேலியாவுடனான ஒருநாள் போட்டி: இந்தியா வரலாற்று வெற்றி தொடரை கைப்பற்றியது
ஆஸ்திரேலியாவுடனான ஒருநாள் போட்டி தொடர் மற்றும் டெஸ்ட் தொடரை கைப்பற்றி இந்திய அணி சாதனை புரிந்து உள்ளது.
மெல்போர்ன்

விராட்கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரில் சிட்னியில் நடந்த முதலாவது ஆட்டத்தில் 34 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணியும், அடிலெய்டில் நடந்த 2-வது ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியும் வெற்றி பெற்றன. இதனால் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.

இந்த நிலையில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று (வெள்ளிக்கிழமை) மெல்போர்னில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, ஆஸ்திரேலியாவை பேட் செய்யுமாறு பணித்தார். இதன்படி இந்திய அணி முதலில் பந்து வீசியது. இந்திய அணியில், அம்பத்தி ராயுடு, முகம்மது சிராஜ், குல்தீப் யாதவ் கழற்றி விடப்பட்டுள்ளனர். அவர்களுக்கு பதிலாக தமிழக வீரர் விஜய்சங்கர், கேதர் ஜாதவ், சாஹல் ஆகியோர் அணியில் இடம் பிடித்துள்ளனர். 

தொடரை நிர்ணயிக்கும் இந்தப்போட்டியில், ஆஸ்திரேலிய அணிக்கு தொடக்கமே அதிர்ச்சி காத்திருந்தது. அலெக்ஸ் கேரி (5 ரன்கள்) புவனேஷ் குமார் பந்தில் ஆட்டமிழந்தார். கேப்டன் பிஞ்ச் 14 ரன்களில் வெளியேறினார்.  உஸ்மான் காவ்ஜா (34 ரன்கள்), ஷான் மார்ஷ் ( 39 ரன்கள்), ஹேன்ட்ஸ்கோம்ப் ( 58 ரன்கள்) ஆகியோர் சீரான இடைவெளியில் சாஹல் சுழலில் சிக்கினர். 

பின்னர் வந்த வீரர்கள், சொல்லிக்கொள்ளும்படி பெரிய அளவில் விளையாடவில்லை. சாஹல்  தொடர்ந்து, சுழலில் ஆதிக்கம் செலுத்த ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினர். 48.4 ஓவர்கள் தாக்குப்பிடித்த ஆஸ்திரேலிய அணி 230 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்திய அணி தரப்பில், சாஹல் 6 விக்கெட்டுகளையும், முகம்மது சமி, புவனேஷ் குமார் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதையடுத்து, 231 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி பேட்டிங்கை தொடங்கியது.

இந்தியா 3 விக்கெட் இழப்பிற்கு வெற்றி இலக்கை எட்டியது. இதன் மூலம் இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் 3-வது ஒருநாள்  போட்டியில் வெற்றி பெற்றது. டோனி அதிகபட்சமாக 114 பந்துகளில் 87 ரன்களும், கேதர் ஜாதவ் 57 பந்துளில் 61 ரன்கள் எடுத்து இருவரும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர். முன்னதாக கோலி 46 ரன்களும், தவான் 23 ரன்களும், ரோகித் சர்மா 9 ரன்களும் எடுத்து இருந்தனர்.

3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் 2 போட்டிகளில் இந்தியா 2 வெற்றி பெற்றதால் தொடரை கைப்பற்றியது. ஏற்கனவே டெஸ்ட் போட்டி தொடரை 2-1 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றி இருந்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

1. உலககோப்பை: 2 புள்ளிகளை கொடுப்பதை வெறுக்கிறேன்; இந்தியா, பாகிஸ்தானை தோற்கடிக்க வேண்டும்- சச்சின் தெண்டுல்கர்
உலககோப்பையில் பாகிஸ்தானுக்கு 2 புள்ளிகளை கொடுப்பதை வெறுக்கிறேன்; இந்தியா, பாகிஸ்தானை தோற்கடிக்க வேண்டும் என சச்சின் தெண்டுல்கர் கூறினார்.
2. பாகிஸ்தான் பற்றி பாதுகாப்பு கவலைகள், தீவிரவாத நாடுகளுடனான உறவை துண்டிக்க வேண்டும் ஐசிசிக்கு பிசிசிஐ கடிதம்
பாகிஸ்தான் பற்றி பாதுகாப்பு கவலைகள், தீவிரவாத நாடுகளுடனான உறவை துண்டிக்க வேண்டும் என சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் கடிதம் எழுத திட்டம்.
3. கெயில் சதம் வீண்: வெஸ்ட் இண்டீசை வீழ்த்தியது இங்கிலாந்து
சர்வதேச கிரிக்கெட்டில் அதிக சிக்சர் விளாசி கிறிஸ் கெய்ல் உலக சாதனை படைத்துள்ளார்.
4. ‘வருவோம் வெல்வோம் செல்வோம்’; இம்ரான் தாஹிர் தமிழில் ட்வீட்.
வரும் மார்ச் மாதம் 23-ஆம் தேதி முதல் ஐபிஎல் 2019-க்கான போட்டிகள் தொடங்குகிறது. இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரர் இம்ரான் தாஹிர் தனது ட்விட்டர் பக்கத்தில் தமிழில் ட்வீட் செய்துள்ளார்!
5. 6 பேர் டக் அவுட் 24 ரன்களுக்கு ஆல் அவுட் ஒரு சுவாரசியமான சர்வதேச ஒருநாள் போட்டி
ஓமன் நாட்டில் நேற்று நடைபெற்ற சர்வதேச ஒருநாள் போட்டியில் 6 பேர் டக் அவுட் 24 ரன்களுக்கு ஆல் அவுட்.