கிரிக்கெட்

இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்து சென்றது + "||" + The Indian cricket team went to New Zealand

இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்து சென்றது

இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்து சென்றது
இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்து சென்றுள்ளது.
ஆக்லாந்து,

ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் மற்றும் ஒரு நாள் கிரிக்கெட் தொடரை வென்று வரலாறு படைத்த விராட் கோலி தலைமையிலான இந்திய அணி நேற்று அங்கிருந்து நியூசிலாந்துக்கு புறப்பட்டு சென்றது. ஆக்லாந்து விமான நிலையத்தில் இந்திய வீரர்களுக்கு ரசிகர்கள் உற்சாக குரல் எழுப்பி வரவேற்பு அளித்தனர்.


இந்திய அணி, நியூசிலாந்தில் 5 ஒரு நாள் போட்டி மற்றும் மூன்று 20 ஓவர் போட்டிகளில் பங்கேற்கிறது. இந்தியா-நியூசிலாந்து மோதும் முதலாவது ஒரு நாள் போட்டி நேப்பியரில் நாளை மறுதினம் (புதன்கிழமை) நடக்கிறது. இந்த ஆட்டம் இந்திய நேரப்படி காலை 7.30 மணிக்கு தொடங்கும்.

இந்தியாவை எதிர்கொள்ள, கனே வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து, வலுவான அணியாக களம் இறங்குகிறது. ஓய்வு அளிக்கப்பட்டிருந்த டாம் லாதம், காலின் டி கிரான்ட்ஹோம் மற்றும் காயத்தில் இருந்து மீண்ட மிட்செல் சான்ட்னெர் ஆகியோர் அணிக்கு திரும்பியுள்ளனர்.


தொடர்புடைய செய்திகள்

1. இந்திய கிரிக்கெட் அணிக்கு புதிய சீருடை அறிமுகம்
இந்திய கிரிக்கெட் அணிக்கு புதிய சீருடை அறிமுகம் செய்யப்பட்டது.
2. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் மற்றும் டி20 போட்டிகளுக்கான இந்திய கிரிக்கெட் அணி அறிவிப்பு
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் மற்றும் டி20 போட்டிகளுக்கான இந்திய கிரிக்கெட் அணி அறிவிக்கப்பட்டு உள்ளது.
3. இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் பாண்ட்யா, கே.ராகுலுக்கு எதிராக ஜோத்பூரில் வழக்குப்பதிவு
இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் பாண்ட்யா, கே.ராகுலுக்கு எதிராக ஜோத்பூரில் உள்ள காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
4. இந்திய கிரிக்கெட் அணிக்கு ஜனாதிபதி, பிரதமர் வாழ்த்து
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை வென்ற இந்திய கிரிக்கெட் அணிக்கு ஜனாதிபதி, பிரதமர் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.