கிரிக்கெட்

பள்ளி அணிகளுக்கு இடையிலான மாநில 20 ஓவர் கிரிக்கெட் + "||" + T20 cricket between the school teams

பள்ளி அணிகளுக்கு இடையிலான மாநில 20 ஓவர் கிரிக்கெட்

பள்ளி அணிகளுக்கு இடையிலான மாநில 20 ஓவர் கிரிக்கெட்
பள்ளி அணிகளுக்கு இடையிலான, மாநில 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இன்று தொடங்க உள்ளது.
நெல்லை,

பள்ளி அணிகளுக்கு இடையே மாநில அளவிலான ஜூனியர் சூப்பர் கிங்ஸ் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியின் இறுதி சுற்று நெல்லை சங்கர்நகர் இந்தியா சிமெண்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் இன்று தொடங்குகிறது. வருகிற 26-ந்தேதி வரை நடைபெறும் இந்த போட்டியில் முதல் சுற்று ஆட்டங்களில் வெற்றி பெற்ற 8 அணிகள் கலந்து கொள்கின்றன. இன்று காலை 9 மணிக்கு நடைபெறும் போட்டியில் சாந்தோம்-லிசாட்லியர் அணியும், பகல் 1 மணிக்கு நடைபெறும் போட்டியில் ஸ்ரீரங்கம்-கான்கோர்டியா அணியும் (ஏ மைதானம்) மோதுகின்றன.

‘பி’ மைதானத்தில் காலை 9 மணிக்கு நடைபெறும் போட்டியில் செயின்ட் பீட்ஸ்-பிளாட்டோஸ் அகாடமி அணியும், மதியம் 1 மணிக்கு நடைபெறும் போட்டியில் நீலாம்பால்-ஜெயேந்திரா அணியும் மோதுகின்றன. இந்த போட்டிக்கான கோப்பை அறிமுக நிகழ்ச்சி நெல்லையில் நேற்று நடந்தது. இதில் இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் துணைத்தலைவர் சண்முகம், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகி விஸ்வநாதன் மற்றும் தட்சணாமூர்த்தி, ஸ்ரீகாந்த் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்திகள்

1. துளிகள்
இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான ஆக்கி போட்டி தொடரில் 5-வது மற்றும் கடைசி ஆட்டம் பெர்த்தில் நேற்று நடந்தது.
2. துளிகள்
10 அணிகள் இடையிலான உலக கோப்பை கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு மே 30-ந்தேதி முதல் ஜூலை 14-ந்தேதி வரை இங்கிலாந்தில் நடக்கிறது.
3. துளிகள்
இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 4 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட், அடிலெய்டில் வருகிற 6-ந் தேதி தொடங்குகிறது.