கிரிக்கெட்

டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் இந்திய அணி தொடர்ந்து முதலிடம் - பேட்டிங்கில் விராட்கோலி முதலிடத்தில் நீடிக்கிறார் + "||" + Test cricket rankings India's squad continues to be top - In the batting, Virat kohli is in the top

டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் இந்திய அணி தொடர்ந்து முதலிடம் - பேட்டிங்கில் விராட்கோலி முதலிடத்தில் நீடிக்கிறார்

டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் இந்திய அணி தொடர்ந்து முதலிடம் - பேட்டிங்கில் விராட்கோலி முதலிடத்தில் நீடிக்கிறார்
டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் இந்திய அணி முதலிடத்தில் தொடருகிறது. பேட்ஸ்மேன் வரிசையில் இந்திய அணி கேப்டன் விராட்கோலி முதலிடத்தில் நீடிக்கிறார்.
துபாய்,

டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் அடிப்படையில் அணிகள் மற்றும் வீரர்களின் தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) நேற்று வெளியிட்டது. இதன்படி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை வென்ற இந்திய அணி 116 புள்ளிகளுடன் முதலிடத்தில் தொடருகிறது.


தென்ஆப்பிரிக்க அணி (110 புள்ளிகள்) 2-வது இடமும், இங்கிலாந்து அணி (108 புள்ளிகள்) 3-வது இடமும், நியூசிலாந்து அணி (107 புள்ளிகள்) 4-வது இடமும், ஆஸ்திரேலிய அணி (101 புள்ளிகள்) 5-வது இடமும், இலங்கை அணி (91 புள்ளிகள்) 6-வது இடமும், பாகிஸ்தான் அணி (88 புள்ளிகள்) 7-வது இடமும், வெஸ்ட்இண்டீஸ் அணி (70 புள்ளிகள்) 8-வது இடமும், வங்காளதேச அணி (69 புள்ளிகள்) 9-வது இடமும், ஜிம்பாப்வே அணி (13 புள்ளிகள்) 10-வது இடமும் வகிக்கின்றன.

பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் இந்திய அணி கேப்டன் விராட்கோலி (922 புள்ளிகள்) முதலிடத்தில் நீடிக்கிறார். நியூசிலாந்து அணி கேப்டன் கனே வில்லியம்சன் (897 புள்ளிகள்) 2-வது இடத்தில் உள்ளார். ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் சிறப்பாக செயல்பட்ட இந்திய வீரர் புஜாரா முன்னேற்றம் கண்டு (881 புள்ளிகள்) 3-வது இடத்தை பிடித்துள்ளார். ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவன் சுமித் (874 புள்ளிகள்) 4-வது இடமும், இங்கிலாந்து வீரர் ஜோரூட் (807 புள்ளிகள்) 5-வது இடமும், ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் (772 புள்ளிகள்) 6-வது இடமும், நியூசிலாந்து வீரர் ஹென்றி நிகோல்ஸ் (763 புள்ளிகள்) 7-வது இடமும், தென்ஆப்பிரிக்க வீரர் மார்க்ராம் (741 புள்ளிகள்) 8-வது இடமும், இலங்கை வீரர் கருணாரத்னே (715 புள்ளிகள்) 9-வது இடமும், தென்ஆப்பிரிக்காவின் ஹசிம் அம்லா (711 புள்ளிகள்) 10-வது இடமும் பெற்றுள்ளனர். இந்திய இளம் விக்கெட் கீப்பர் ரிஷாப் பான்ட் 17-வது இடத்தை பிடித்துள்ளார்.

பந்து வீச்சாளர்கள் தரவரிசையில் தென்ஆப்பிரிக்க வீரர் ரபடா (882 புள்ளிகள்) முதலிடத்தில் நீடிக்கிறார். இங்கிலாந்து வீரர் ஜேம்ஸ் ஆண்டர்சன் (874 புள்ளிகள்), தென்ஆப்பிரிக்காவின் பிலாண்டர் (809 புள்ளிகள்), ஆஸ்திரேலியாவின் கம்மின்ஸ் (804 புள்ளிகள்), இந்தியாவின் ரவீந்திர ஜடேஜா (794 புள்ளிகள்) முறையே 2 முதல் 5 இடங்களை பெற்றுள்ளனர். இந்திய வீரர்கள் அஸ்வின் 9-வது இடத்தையும், ஜஸ்பிரித் பும்ரா 15-வது இடத்தையும் பிடித்துள்ளனர்.

ஆல்-ரவுண்டர்கள் தரவரிசையில் வங்காளதேச வீரர் ஷகிப் அல்-ஹசன் (415 புள்ளிகள்), இந்திய வீரர் ரவீந்திர ஜடேஜா (387 புள்ளிகள்), வெஸ்ட்இண்டீஸ் வீரர் ஜாசன் ஹோல்டர் (365 புள்ளிகள்), இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸ் (342 புள்ளிகள்), தென் ஆப்பிரிக்க வீரர் பிலாண்டர் (341 புள்ளிகள்), இந்திய வீரர் அஸ்வின் (321 புள்ளிகள்) ஆகியோர் முறையே முதல் 6 இடங்கள் வகிக்கின்றனர்.


தொடர்புடைய செய்திகள்

1. உலக கோப்பை போட்டிக்கான இந்திய அணி போதிய பலத்துடன் உள்ளது - பயிற்சியாளர் ரவிசாஸ்திரி பேட்டி
உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணி போதிய பலத்துடன் உள்ளது என்று தலைமை பயிற்சியாளர் ரவிசாஸ்திரி தெரிவித்தார்.
2. 8 நாடுகள் ஆக்கி: இந்திய அணி அறிவிப்பு
8 நாடுகள் இடையே நடைபெற உள்ள ஆக்கி போட்டிக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டது.
3. டோனியின் அறிவுரை அதிக முறை தவறாக தான் முடிந்தது - குல்தீப் யாதவ் குற்றச்சாட்டு
டோனியின் அறிவுரை அதிக முறை தவறாக தான் முடிந்தது என்று இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் குற்றம்சாட்டி இருக்கிறார்.
4. டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் நியூசிலாந்து அணி 2-வது இடத்துக்கு முன்னேற்றம்
டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில், நியூசிலாந்து அணி 2-வது இடத்துக்கு முன்னேறி உள்ளது.
5. 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி: இந்திய அணிக்கு 159 ரன்கள் வெற்றி இலக்கு
நியூசிலாந்துக்கு எதிரான 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணிக்கு வெற்றி இலக்காக 159 ரன்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.