கிரிக்கெட்

நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டி; 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி + "||" + 1st ODI match against NZ; India won by 8 wickets

நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டி; 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி

நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டி; 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி
நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது.
நேப்பியர்,

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் இடையேயான முதல் ஒரு நாள் கிரிக்கெட் போட்டி நேப்பியரில் நடைபெற்று வருகிறது.  இதில், டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

ஆனால் அந்த அணியால் இந்தியாவின் பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் 38 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 157 ரன்கள் எடுத்திருந்தது.  இதனால் இந்திய அணி வெற்றி பெற 158 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

இதனை அடுத்து இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ரோகித் சர்மா மற்றும் ஷிகர் தவான் விளையாடினர்.  ஆனால் இந்திய அணியினர் சூரிய ஒளியால் பந்து வீச்சை எதிர்கொள்ள சிரமப்பட்டனர்.  இதனால் ஆட்டம் அரை மணிநேரம் நிறுத்தப்பட்டது.  இதனை தொடர்ந்து 49 ஓவர்கள் வரை பந்து வீச முடிவானது.  வெற்றி இலக்கு 156 ஆக குறைத்து நிர்ணயிக்கப்பட்டது.

இந்த நிலையில், தொடக்க ஆட்டக்காரர் ரோகித் (11) ரன்கள் எடுத்து வெளியேறினார்.  ஆனால் தவான் 75 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.  ரோகித் ஆட்டமிழந்த பின்னர் விளையாடிய கோலி (45) ரன்கள் எடுத்து பெர்குசன் பந்தில் விக்கெட் கீப்பர் லாத்தமிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.  ராயுடு (13) ரன்களுடன் ஆட்டமிழக்கவில்லை.

இந்த நிலையில் இந்திய அணி 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 156 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.  இதனால் 5 போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய அணி தேர்வு தள்ளிவைப்பு
வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய அணி தேர்வு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
2. டிக்கெட் கிடைப்பதில் தாமதம்; இந்திய அணி இறுதிப்போட்டி வரை இங்கிலாந்தில் இருக்கும் - தகவல்கள்
இந்தியா உலக கோப்பையை விட்டு வெளியேறியது. டிக்கெட் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால் அணி இங்கிலாந்தை விட்டு வெளியேறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
3. அரைஇறுதிக்கு முன்னேறும் முனைப்பில் இந்திய அணி - வங்காளதேசத்துடன் இன்று மோதல்
உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் இந்தியா-வங்காளதேசம் அணிகள் மோதுகின்றன.
4. இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டம்: இந்திய அணியின் 4-வது வரிசை வீரராக ரிஷாப் பண்ட் - ரோகித் சர்மா கருத்து
இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணியின் 4-வது வரிசை வீரராக ரிஷாப் பண்ட் களம் இறக்கப்பட்டது குறித்து ரோகித் சர்மா கருத்து தெரிவித்துள்ளார்.
5. இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணிக்கு ஆதரவு அளிக்கும் பாகிஸ்தான் ரசிகர்கள்
இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில், இந்திய அணிக்கு பாகிஸ்தான் ரசிகர்கள் ஆதரவாக உள்ளனர்.