கிரிக்கெட்

பள்ளி கிரிக்கெட்: சென்னை அணிகள் வெற்றி + "||" + பள்ளி கிரிக்கெட்: சென்னை அணிகள் வெற்றி

பள்ளி கிரிக்கெட்: சென்னை அணிகள் வெற்றி

பள்ளி கிரிக்கெட்: சென்னை அணிகள் வெற்றி
பள்ளி கிரிக்கெட் போட்டியில் சென்னை அணிகள் வெற்றி பெற்றது.
நெல்லை, 

பள்ளிகளுக்கு இடையே மாநில அளவிலான ஜூனியர் சூப்பர் கிங்ஸ் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நெல்லையில் நடந்து வருகிறது. இதில் 2-வது நாளான நேற்று நடந்த ஆட்டம் ஒன்றில் செயிண்ட் பீட்ஸ் (சென்னை)-ஜெயேந்திர சரசுவதி (கோவை) அணிகள் மோதின. முதலில் பேட் செய்த செயிண்ட் பீட்ஸ் அணி 19.4 ஓவரில் 126 ரன்னில் ‘ஆல்-அவுட்’ ஆனது. தொடர்ந்து ஆடிய ஜெயேந்திர சரசுவதி அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 123 ரன்களே எடுத்தது. இதனால் செயிண்ட் பீட்ஸ் அணி 3 ரன் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது.

மற்றொரு ஆட்டத்தில் சாந்தோம் (சென்னை)-ஸ்ரீரங்கம் பள்ளி (திருச்சி) அணிகள் சந்தித்தன. முதலில் பேட்டிங் செய்த சாந்தோம் அணி 9 விக்கெட்டுக்கு 147 ரன்கள் சேர்த்தது. அடுத்து களம் கண்ட ஸ்ரீரங்கம் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 86 ரன்களே எடுத்தது. இதனால் சாந்தோம் அணி 61 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மற்ற ஆட்டங்களில் பிளோட்டோஸ் அகாடமி (திருப்பூர்), லீ சாட்லியர் (மதுரை) ஆகிய அணிகளும் வெற்றி பெற்றன.