கிரிக்கெட்

ரஞ்சி கிரிக்கெட்டில் கேரளாவை வீழ்த்தி விதர்பா அணி இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம் + "||" + Ranji Cricket defeat Kerala Vidarbha team Progress to final

ரஞ்சி கிரிக்கெட்டில் கேரளாவை வீழ்த்தி விதர்பா அணி இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்

ரஞ்சி கிரிக்கெட்டில் கேரளாவை வீழ்த்தி விதர்பா அணி இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்
ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியின் அரைஇறுதியில் விதர்பா அணி இன்னிங்ஸ் மற்றும் 11 ரன்கள் வித்தியாசத்தில் கேரளாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

வயநாடு, 

ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியின் அரைஇறுதியில் விதர்பா அணி இன்னிங்ஸ் மற்றும் 11 ரன்கள் வித்தியாசத்தில் கேரளாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

அரைஇறுதி ஆட்டம்

ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் கேரளா–நடப்பு சாம்பியன் விதர்பா அணிகள் இடையிலான முதலாவது அரைஇறுதி ஆட்டம் வயநாட்டில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் முதலில் ஆடிய கேரள அணி முதல் இன்னிங்சில் 106 ரன்னில் ‘ஆல்–அவுட்’ ஆனது. இதனை அடுத்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய விதர்பா அணி முதல் நாள் ஆட்டம் முடிவில் 45 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 171 ரன்கள் எடுத்து இருந்தது.

2–வது நாள் ஆட்டம் நேற்று நடந்தது. தொடர்ந்து ஆடிய விதர்பா அணி முதல் இன்னிங்சில் 52.4 ஓவர்களில் 208 ரன்கள் எடுத்து ‘ஆல்–அவுட்’ ஆனது. அதிகபட்சமாக பைசல் 75 ரன்கள் சேர்த்தார். கேரள அணி தரப்பில் சந்தீப் வாரியர் 5 விக்கெட்டும், பாசில் தம்பி 3 விக்கெட்டும், நிதேஷ் 2 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

விதர்பா அணி இன்னிங்ஸ் வெற்றி

பின்னர் 102 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2–வது இன்னிங்சை ஆடிய கேரள அணி, விதர்பா அணி வீரர்களின் அபார பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் 24.5 ஓவர்களில் 91 ரன்னில் சுருண்டது. இதனால் விதர்பா அணி இன்னிங்ஸ் மற்றும் 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. அதிகபட்சமாக அருண் கார்த்திக் 36 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தனர்.

விதர்பா அணி தரப்பில் உமேஷ் யாதவ் 5 விக்கெட்டும், யாஷ் தாகூர் 4 விக்கெட்டும் வீழ்த்தினார்கள். சொந்த மண்ணில் கேரள அணி 2 நாட்களுக்குள் தோல்வியை சந்தித்துள்ளது. நேற்று ஒரே நாளில் 15 விக்கெட்டுகள் வீழ்ந்தன. மொத்தம் 12 விக்கெட்டுகள் சாய்த்த விதர்பா அணியின் வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவ் ஆட்டநாயகன் விருது பெற்றார்.

கர்நாடகம் 275 ரன்னில் ‘ஆல்–அவுட்’

கர்நாடகா–சவுராஷ்டிரா அணிகள் இடையிலான மற்றொரு அரைஇறுதி ஆட்டம் பெங்களூருவில் நடந்து வருகிறது. முதலில் ஆடிய கர்நாடக அணி முதல் நாள் ஆட்டம் முடிவில் முதல் இன்னிங்சில் 9 விக்கெட் இழப்புக்கு 264 ரன்கள் எடுத்து இருந்தது. 2–வது நாளான நேற்று தொடர்ந்து ஆடிய கர்நாடக அணி முதல் இன்னிங்சில் 100.3 ஓவர்களில் 275 ரன்கள் எடுத்து ‘ஆல்–அவுட்’ ஆனது. இதனை அடுத்து முதல் இன்னிங்சை ஆடிய சவுராஷ்டிரா அணி நேற்றைய ஆட்ட நேரம் முடிவில் 66.3 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 227 ரன்கள் எடுத்தது. ஸ்னெல் பட்டேல் 85 ரன்னும், புஜாரா 45 ரன்னும் எடுத்தனர்.


தொடர்புடைய செய்திகள்

1. 3 நாடுகள் கிரிக்கெட்: வெஸ்ட்இண்டீஸ் அணி வெற்றி
வெஸ்ட்இண்டீஸ், வங்காளதேசம், அயர்லாந்து ஆகிய 3 நாடுகள் இடையிலான ஒரு நாள் கிரிக்கெட் போட்டி அயர்லாந்தில் நடந்து வருகிறது.
2. பெண்கள் 20 ஓவர் கிரிக்கெட்: சூப்பர் நோவாஸ் அணி ‘சாம்பியன்’
3 அணிகள் இடையிலான பெண்கள் 20 ஓவர் சேலஞ்ச் கிரிக்கெட் போட்டி ஜெய்ப்பூரில் நடந்தது.
3. பெண்கள் 20 ஓவர் கிரிக்கெட் இறுதிப்போட்டியில் சூப்பர் நோவாஸ்–வெலா சிட்டி அணிகள் இன்று மோதல்
3 அணிகள் இடையிலான பெண்கள் 20 ஓவர் சேலஞ்ச் கிரிக்கெட் போட்டி ஜெய்ப்பூரில் நடந்து வருகிறது.
4. பெண்கள் 20 ஓவர் கிரிக்கெட்: சூப்பர் நோவாஸ் அணி வெற்றி
3 அணிகள் இடையிலான பெண்கள் 20 ஓவர் சேலஞ்ச் கிரிக்கெட் போட்டி ஜெய்ப்பூரில் நடந்து வருகிறது.
5. உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி அரைஇறுதிக்கு தகுதி பெறுவது உறுதி கபில்தேவ் கணிப்பு
‘உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி அரைஇறுதிக்கு தகுதி பெறுவது உறுதி’ என்று இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ் தெரிவித்தார்.