கிரிக்கெட்

2வது ஒரு நாள் போட்டி; நியூசிலாந்து வெற்றி பெற 325 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது + "||" + 2nd ODI match; New Zealand needs 325 runs to win

2வது ஒரு நாள் போட்டி; நியூசிலாந்து வெற்றி பெற 325 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது

2வது ஒரு நாள் போட்டி; நியூசிலாந்து வெற்றி பெற 325 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது
இந்தியாவுக்கு எதிரான 2வது ஒரு நாள் போட்டியில் நியூசிலாந்து வெற்றி பெற 325 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
மவுண்ட் மவுங்கானுயி,

நியூசிலாந்து நாட்டில் சுற்று பயணம் செய்து வரும் இந்திய அணி அங்கு 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் போட்டி தொடரில் விளையாடி வருகிறது.  இதில் நேப்பியரில் நடந்த முதலாவது ஆட்டத்தில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இதனை அடுத்து நியூசிலாந்துக்கு எதிரான 2வது ஒரு நாள் போட்டியில் டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு செய்தது.  நியூசிலாந்து அணியில் சோதி மற்றும் டி கிராண்ட்ஹோம் ஆகியோர் சேர்க்கப்பட்டு உள்ளனர்.  சான்ட்னர் மற்றும் சவுதீ ஆகியோர் அணியில் இருந்து நீக்கப்பட்டு உள்ளனர்.

இதன்பின் விளையாடிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ரோகித் சர்மா (87), ஷிகர் தவான் (66) ரன்கள் எடுத்து ஆட்டமிழந்து உள்ளனர்.  அவர்களை தொடர்ந்து விளையாடிய கோலி (43), ராயுடு (47) ரன்கள் எடுத்து வெளியேறினர்.

தோனி (48), கே.எம். ஜாதவ் (22) ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.  இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 324 ரன்கள் எடுத்து உள்ளது.  இதனால் நியூசிலாந்து அணி வெற்றி பெற 325 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.