கிரிக்கெட்

நியூசிலாந்துக்கு எதிரான கிரிக்கெட்: தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா 3–வது ஒரு நாள் போட்டி இன்று நடக்கிறது + "||" + Cricket against New Zealand: India in the conquest of the series

நியூசிலாந்துக்கு எதிரான கிரிக்கெட்: தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா 3–வது ஒரு நாள் போட்டி இன்று நடக்கிறது

நியூசிலாந்துக்கு எதிரான கிரிக்கெட்: தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா 3–வது ஒரு நாள் போட்டி இன்று நடக்கிறது
நியூசிலாந்துக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் தொடரை வெல்லும் முனைப்புடன் இந்திய அணி இன்று 3–வது ஒரு நாள் போட்டியில் களம் இறங்குகிறது.

மவுன்ட் மாங்கானு, 

நியூசிலாந்துக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் தொடரை வெல்லும் முனைப்புடன் இந்திய அணி இன்று 3–வது ஒரு நாள் போட்டியில் களம் இறங்குகிறது.

ஒரு நாள் கிரிக்கெட்

இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் நேப்பியரில் நடந்த முதலாவது ஆட்டத்தில் 8 விக்கெட் வித்தியாசத்திலும், மவுன்ட் மாங்கானுவில் நடந்த 2–வது ஆட்டத்தில் 90 ரன்கள் வித்தியாசத்திலும் இந்திய அணி வெற்றி பெற்று தொடரில் 2–0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இந்த நிலையில் இந்தியா–நியூசிலாந்து மோதும் 3–வது ஒரு நாள் போட்டி மவுன்ட் மாங்கானுவில் இன்று (திங்கட்கிழமை) நடக்கிறது. பந்து வீச்சு மற்றும் பேட்டிங் இரண்டிலும் கச்சிதமாக செயல்பட்டு முதல் இரு ஆட்டங்களிலும் வெற்றி கண்ட இந்திய அணி இன்றைய ஆட்டத்திலும் ஆதிக்கத்தை நிலைநாட்டி தொடரை வெல்ல தீவிரம் காட்டும். இந்த ஆட்டத்துக்கு பிறகு இந்திய கேப்டன் விராட் கோலிக்கு ஓய்வு அளிக்கப்படுகிறது. அதனால் தொடரை வென்ற திருப்தியோடு தாயகம் திரும்ப அவர் விரும்புவார்.

மிரட்டும் சுழல்

கை மணிக்கட்டை அதிகம் பயன்படுத்தி சுழற்பந்து வீசும் குல்தீப் யாதவும், யுஸ்வேந்திர சாஹலும் இணைந்து 12 விக்கெட்டுகள் அறுவடை செய்திருப்பதுடன், மிடில் ஓவர்களில் சிக்கனத்தையும் காட்டுகிறார்கள். அவர்களின் பந்து வீச்சை கண்டாலே நியூசிலாந்து பேட்ஸ்மேன்கள் நடுங்குகிறார்கள். இதே போல் முகமது ‌ஷமி, புவனேஷ்வர்குமார் தேவையான நேரத்தில் விக்கெட்டுகளை வீழ்த்துகிறார்கள். தவான், ரோகித் சர்மா, டோனி, கோலி ஆகியோர் கணிசமான ரன்கள் எடுக்கிறார்கள். இது தான் இந்திய அணியின் வெற்றிக்கான சூட்சுமம். இதே நிலை இன்றைய ஆட்டத்திலும் தொடர்ந்தால், நியூசிலாந்தை கட்டுப்படுத்துவதில் சிரமம் இருக்காது. சர்ச்சைக்குரிய பேச்சால் இடை நீக்கம் செய்யப்பட்டிருந்த ஆல்–ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா அணிக்கு திரும்பியிருப்பதால், இந்த ஆட்டத்தில் ஆடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இன்றைய மோதலில் தோற்றால் தொடரை இழக்க நேரிடும் என்பதால் நியூசிலாந்து வீரர்கள் கடுமையாக போராடுவார்கள். இந்திய சுழற்பந்து வீச்சை சமாளிப்பதில் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறார்கள்.

மவுன்ட் மாங்கானு ஆடுகளம் பேட்டிங்குக்கு உகந்த வகையில் காணப்படுகிறது. அதை சரியான முறையில் பயன்படுத்தி தவறுக்கு பரிகாரம் தேடிக்கொள்ள நியூசிலாந்து பேட்ஸ்மேன்கள் முயற்சிப்பார்கள். இதனால் இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது.

காலை 7.30 மணிக்கு...

போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:–

இந்தியா: ஷிகர் தவான், ரோகித் சர்மா, விராட் கோலி (கேப்டன்), அம்பத்தி ராயுடு, டோனி, கேதர் ஜாதவ், ஹர்திக் பாண்ட்யா, புவனேஷ்வர்குமார், முகமது ‌ஷமி, குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சாஹல்.

நியூசிலாந்து: காலின் முன்ரோ, மார்ட்டின் கப்தில், கேன் வில்லியம்சன் (கேப்டன்), ராஸ் டெய்லர், டாம் லாதம், ஹென்றி நிகோல்ஸ், மிட்செல் சான்ட்னெர், டக் பிரேஸ்வெல், சோதி, லோக்கி பெர்குசன், டிரென்ட் பவுல்ட்.

இந்திய நேரப்படி காலை 7.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ்1 சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.


தொடர்புடைய செய்திகள்

1. பிக்பாஷ் கிரிக்கெட்: மெல்போர்ன் ரெனகேட்ஸ் அணி ‘சாம்பியன்’
பிக்பாஷ் 20 ஓவர் கிரிக்கெட்டில் ஆரோன் பிஞ்ச் தலைமையிலான மெல்போர்ன் ரெனகேட்ஸ் அணி சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றது.
2. வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்களின் குழந்தைகளின் படிப்பு செலவை ஏற்கிறேன் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷேவாக் அறிவிப்பு
காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் வீரமரணம் அடைந்த 40 ராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கு விளையாட்டு பிரபலங்கள் ஆதரவுகரம் நீட்டி வருகிறார்கள். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஷேவாக் தனது டுவிட்டர் பக்கத்தில், ‘உயிர்தியாகம் செய்த இந்த ராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கு நாம் எது செய்தாலும் போதுமானதாக இருக்காது. ஆனால் குறைந்தது என்னால் முடிந்த உதவியாக வீரமரணம் அடைந்த வீரர்களின் குழந்தைகளின் கல்வி செலவு முழுவதையும் நான் ஏற்றுக்கொள்கிறேன். அவர்களை எனது பெயரில் உள்ள ‘ஷேவாக் சர்வதேச பள்ளி’யில் படிக்க வைக்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்
3. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கிரிக்கெட்: இந்திய ஒரு நாள் போட்டி அணியில் இருந்து தினேஷ் கார்த்திக் நீக்கம் விராட் கோலி, லோகேஷ் ராகுல், பும்ரா திரும்புகிறார்கள்
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணியில் இருந்து தமிழக மூத்த வீரர் தினேஷ் கார்த்திக் நீக்கப்பட்டுள்ளார்.
4. இரானி கோப்பை கிரிக்கெட்: விதர்பா அணி 425 ரன்கள் குவிப்பு கார்னிவர் சதம் அடித்தார்
நடப்பு ரஞ்சி சாம்பியன் விதர்பா, ரெஸ்ட் ஆப் இந்தியா அணிகள் இடையிலான இரானி கோப்பைக்கான கிரிக்கெட் போட்டி நாக்பூரில் நடந்து வருகிறது.
5. முதலாவது ஒரு நாள் கிரிக்கெட்: வங்காளதேச அணியை எளிதில் வீழ்த்தியது, நியூசிலாந்து மார்ட்டின் கப்தில் சதம் அடித்தார்
நியூசிலாந்து–வங்காளதேச அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட ஒரு நாள் போட்டி தொடரில் முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி நேப்பியரில் நேற்று நடந்தது.

ஆசிரியரின் தேர்வுகள்...