கிரிக்கெட்

வெற்றியை நோக்கி சவுராஷ்டிரா: ரஞ்சி கிரிக்கெட்டில் புஜாரா சதம் + "||" + Towards victory Saurashtra: Pujara century in Ranji Cricket

வெற்றியை நோக்கி சவுராஷ்டிரா: ரஞ்சி கிரிக்கெட்டில் புஜாரா சதம்

வெற்றியை நோக்கி சவுராஷ்டிரா: ரஞ்சி கிரிக்கெட்டில் புஜாரா சதம்
ரஞ்சி கிரிக்கெட்டில் கர்நாடகா – சவுராஷ்டிரா இடையிலான அரைஇறுதி ஆட்டம் பெங்களூருவில் உள்ள சின்னசாமி ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது.

பெங்களூரு, 

ரஞ்சி கிரிக்கெட்டில் கர்நாடகா – சவுராஷ்டிரா இடையிலான அரைஇறுதி ஆட்டம் பெங்களூருவில் உள்ள சின்னசாமி ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இதில் முதல் இன்னிங்சில் கர்நாடகா 275 ரன்களும், சவுராஷ்டிரா 236 ரன்களும் எடுத்தன. 39 ரன்கள் முன்னிலையுடன் 2–வது இன்னிங்சை ஆடிய கர்நாடகா 3–வது நாள் முடிவில் 8 விக்கெட்டுக்கு 237 ரன்கள் எடுத்திருந்தது. 4–வது நாளான நேற்று தொடர்ந்து ஆடிய கர்நாடகா மேற்கொண்டு 2 ரன் எடுப்பதற்குள் எஞ்சிய இரு விக்கெட்டையும் பறிகொடுத்து விட்டது. ஸ்ரேயாஸ் கோபால் 61 ரன்களில் கேட்ச் ஆனார்.

இதன் மூலம் நிர்ணயிக்கப்பட்ட 279 ரன்கள் இலக்கை நோக்கி 2–வது இன்னிங்சை தொடங்கிய சவுராஷ்டிரா 23 ரன்னுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்த போதிலும் புஜாராவும், ஷெல்டன் ஜாக்சனும் கைகோர்த்து அணியை தூக்கி நிறுத்தினர். அபாரமாக ஆடிய புஜாரா தனது 49–வது முதல்தர சதத்தை எட்டினார்.

ஆட்ட நேர முடிவில் சவுராஷ்டிரா அணி 74 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 224 ரன்கள் சேர்த்துள்ளது. புஜாரா 108 ரன்களுடனும் (216 பந்து, 14 பவுண்டரி), ஜாக்சன் 90 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

இன்று கடைசி நாள் ஆட்டம் நடக்கிறது. இன்னும் 55 ரன்கள் மட்டுமே தேவைப்படுவதால் சவுராஷ்டிரா அணி எளிதில் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.