கிரிக்கெட்

அந்தரத்தில் டைவ் அடித்து கேட்ச் பிடித்த இளம் வீரரான ஹார்திக் பாண்ட்யா + "||" + hardikpandya takes a stunning catch to dismiss Kane Williamson

அந்தரத்தில் டைவ் அடித்து கேட்ச் பிடித்த இளம் வீரரான ஹார்திக் பாண்ட்யா

அந்தரத்தில் டைவ் அடித்து கேட்ச் பிடித்த  இளம் வீரரான ஹார்திக் பாண்ட்யா
நியூசிலாந்து அணிக்கெதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் இளம் வீரரான ஹார்திக் பாண்ட்யா டைவ் அடித்து கேட்ச் பிடித்த வீடியோ வெளியாகியுள்ளது.
 இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கிடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி  ஓவல் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது.  இந்திய அணியின் பந்து வீச்சை தாக்குபிடிக்க முடியாமல் 49 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 243 ரன்கள்  எடுத்தது.

தொடர்ந்து ஆடிய இந்தியா 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கில் வென்றது இந்திய அணி.

இந்நிலையில் பெண்களை பற்றி பேசி சர்ச்சையில் சிக்கிய ஹார்திக் பாண்ட்யாவுக்கு இப்போட்டியில் வாய்ப்பு கொடுக்கப்பட்டது.

வாய்ப்பு கொடுக்கப்பட்ட முதல் போட்டியிலேயே அவர் அற்புதமாக கேட்ச் பிடித்து அசத்தியுள்ளார். சஹால் வீசிய பந்தை, எதிர்திசையில் நின்ற வில்லியம்சன் இறங்கி அடித்து ஆட, லெக் திசையில் நின்று பீல்டிங் செய்த பாண்ட்யா அபாரமாக டைவ் அடித்து கேட்ச் பிடித்தார். இதைக்கண்ட வில்லியம்சன் ஒரு வித ஏமாற்றத்துடனே பெவிலியன் திரும்பினார். அந்த வீடியோ தற்போது வெளியாக, சர்ச்சைக்குப்பின் முதல் போட்டியில் செம கேட்ச் பிடித்து பாராட்டை பெற்று வருகிறார் என்று இணையவாசிகள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. உலக கோப்பை கிரிக்கெட் 100 நாள் ‘கவுண்ட்டவுன்’ தொடங்கியது
உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான 100 நாள் ‘கவுண்ட்டவுன்’ தொடங்கியது.
2. உலக கோப்பை கிரிக்கெட்டில் இந்திய அணி பாகிஸ்தானுடன் விளையாடக்கூடாது மும்பை கிளப் வலியுறுத்தல்
உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி பாகிஸ்தானுடன் மோதுவதை தவிர்க்க வேண்டும் என்று மும்பையைச் சேர்ந்த கிரிக்கெட் கிளப் வலியுறுத்தியுள்ளது.
3. இரானி கோப்பை கிரிக்கெட்: ரெஸ்ட் ஆப் இந்தியா 374 ரன்கள் குவித்து ‘டிக்ளேர்’ விஹாரி மீண்டும் சதம் அடித்து சாதனை
நடப்பு ரஞ்சி சாம்பியன் விதர்பா– ரெஸ்ட் ஆப் இந்தியா அணிகள் இடையிலான இரானி கோப்பை கிரிக்கெட் போட்டி நாக்பூரில் நடந்து வருகிறது.
4. தேசிய கொடிக்கு டோனி அளித்த மரியாதை: சமூக வலைதளங்களில் வைரலாகும் காட்சிகள்
தேசியக்கொடிக்கு டோனி உரிய மரியாதை அளித்த சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
5. பேட்டி கொடுக்க மறுத்து தப்பி ஓடிய டோனி
சகால் டிவிக்கு பேட்டி கொடுக்க மறுத்து டோனி தப்பி ஓடிய காட்சிகள் இணையத்தில் வைரலாகியுள்ளது.

ஆசிரியரின் தேர்வுகள்...