கிரிக்கெட்

சர்வதேச கிரிக்கெட் போட்டியில் பந்து வீச அம்பத்தி ராயுடுக்கு தடை ஐ.சி.சி. நடவடிக்கை + "||" + International cricket match Throw the ball Ambati Rayudu has been banned ICC The action

சர்வதேச கிரிக்கெட் போட்டியில் பந்து வீச அம்பத்தி ராயுடுக்கு தடை ஐ.சி.சி. நடவடிக்கை

சர்வதேச கிரிக்கெட் போட்டியில் பந்து வீச அம்பத்தி ராயுடுக்கு தடை ஐ.சி.சி. நடவடிக்கை
சர்வதேச கிரிக்கெட் போட்டியில் பந்து வீச அம்பத்தி ராயுடுக்கு தடை விதித்து ஐ.சி.சி. நடவடிக்கை எடுத்துள்ளது.
துபாய்,

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் அம்பத்தி ராயுடு பந்து வீசினார். அவரது பந்து வீச்சு விதிமுறைக்கு புறம்பாக இருப்பதாக போட்டி நடுவர்கள் புகார் தெரிவித்தனர். இதனை அடுத்து அவரது பந்து வீச்சை 14 நாட்களுக்குள் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி.) அங்கீகாரம் பெற்ற பந்து வீச்சு பரிசோதனை மையத்தில் சோதனைக்கு உட்படுத்தும் படி ஐ.சி.சி. உத்தரவிட்டு இருந்தது. ஆனால் அதன்படி அம்பத்தி ராயுடு தனது பந்து வீச்சை சோதனைக்கு உட்படுத்தவில்லை.

இதைத்தொடர்ந்து சர்வதேச கிரிக்கெட் போட்டியில் பந்து வீச அம்பத்தி ராயுடுக்கு தடை விதித்து ஐ.சி.சி. நடவடிக்கை எடுத்துள்ளது. அம்பத்தி ராயுடு பந்து வீச்சு சோதனைக்கு ஆஜராகி அதன் ஆய்வு அறிக்கை முடிவு தெரியும் வரை அவர் சர்வதேச போட்டியில் பந்து வீச முடியாது.

ஆசிரியரின் தேர்வுகள்...