கிரிக்கெட்

2020-ம் ஆண்டு நடைபெறவுள்ள 20 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான அட்டவணை வெளியீடு + "||" + ICC Reveals Men's, Women's T20 World Cup 2020 Fixtures, Virat Kohli's Team In Tricky Group

2020-ம் ஆண்டு நடைபெறவுள்ள 20 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான அட்டவணை வெளியீடு

2020-ம் ஆண்டு நடைபெறவுள்ள 20 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான அட்டவணை வெளியீடு
அடுத்த ஆண்டு நடைபெற உள்ள 20 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான போட்டி அட்டவணை வெளியாகியுள்ளது.

பெண்கள் அணிகளுக்கான தொடர் 2020ஆம் ஆண்டு பிப்ரவரி 21ஆம் தேதி ஆஸ்திரேலியாவில் தொடங்குகிறது. இதில் சர்வதேச தரவரிசையில் முதல் 10 இடங்களில் உள்ள அணிகள் மோதுகின்றன. மார்ச் 8ஆம் தேதி மெல்போர்னில் இறுதிப் போட்டி நடக்கிறது. 

ஆண்கள் அணிகளுக்கான தொடர் 2020ம் ஆண்டு அக்டோபர் 24ஆம் தேதி தொடங்கும் என ஐசிசி அறிவித்துள்ளது. இதில் தரவரிசையில் முதல் 8 இடங்களில் உள்ள அணிகள் ஏற்கெனவே தகுதி பெற்று விட்ட நிலையில் மீதமுள்ள 8 அணிகளுக்கு தகுதிச் சுற்று போட்டிகள் நடைபெறுகின்றன.

ஆண்கள் அணி தகுதி போட்டிகள் அக்டோபர் 18 - 23

குரூப் போட்டிகள்  (அக்டோபர் 24 முதல்  நவம்பர் 8)

குரூப் 1: பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, மேற்கிந்திய தீவுகள், நியூசிலாந்து, இரண்டு தகுதி போட்டிகள் 

குரூப் 2 : இந்தியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான், இரண்டு தகுதி போட்டிகள் 

அரையிறுதி போட்டி : நவம்பர் 11 மற்றும் 12

இறுதி போட்டி : நவம்பர் 15

பெண்கள் குரூப் போட்டிகள்  (பிப்ரவரி 21 - மார்ச் 3)

குரூப் 1: ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இந்தியா, இலங்கை, தகுதி 1

குரூப் 2: இங்கிலாந்து, மேற்கிந்திய தீவுகள், தென் ஆப்ரிக்கா, பாகிஸ்தான், தகுதி 2

அரை இறுதி போட்டி : மார்ச் 5

இறுதி போட்டி : மார்ச் 8

ஒரே நாட்டில், ஒரே ஆண்டில் ஆண்கள் மற்றும் பெண்கள் அணிகளுக்கான 20 ஓவர் கிரிக்கெட் உலகக்கோப்பை தொடர் நடப்பது இதுவே முதல்முறை.

ஆசிரியரின் தேர்வுகள்...