கிரிக்கெட்

ஒரு நாள் தொடரை வெல்வது யார்? பாகிஸ்தான்-தென்ஆப்பிரிக்கா கடைசி ஆட்டத்தில் இன்று மோதல் + "||" + Pakistan South Africa Confrontation in the last match today

ஒரு நாள் தொடரை வெல்வது யார்? பாகிஸ்தான்-தென்ஆப்பிரிக்கா கடைசி ஆட்டத்தில் இன்று மோதல்

ஒரு நாள் தொடரை வெல்வது யார்? பாகிஸ்தான்-தென்ஆப்பிரிக்கா கடைசி ஆட்டத்தில் இன்று மோதல்
தென்ஆப்பிரிக்காவுக்கு சென்றுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றுள்ளது. இதுவரை நடந்துள்ள 4 ஆட்டங்களில் இரு அணிகளும் தலா 2-ல் வெற்றி கண்டுள்ளன.
கேப்டவுன்,

இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையே தொடர் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் 5-வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி கேப்டவுனில் இன்று நடக்கிறது. முந்தைய ஆட்டத்தில் வெறும் 164 ரன்னில் அடங்கிய பிளிஸ்சிஸ் தலைமையிலான தென்ஆப்பிரிக்க அணி இன்றைய ஆட்டத்தில் எழுச்சி பெற வேண்டிய நெருக்கடியில் உள்ளது. கடந்த வாரம் உள்ளூர் முதல்தர போட்டியில் சதம் அடித்து கலக்கிய ஆல்-ரவுண்டர் வியான் முல்டெர் தென்ஆப்பிரிக்க அணிக்கு அழைக்கப்பட்டுள்ளார். அவர் களம் காண வாய்ப்புள்ளது.


அதே சமயம் 4-வது ஆட்டத்தில் கிடைத்த வெற்றியால் பாகிஸ்தான் வீரர்களின் நம்பிக்கை அதிகரித்துள்ளது. பாகிஸ்தான் கேப்டன் சர்ப்ராஸ் அகமதுவுக்கு தடை விதிக்கப்பட்டு இருப்பதால் இந்த ஆட்டத்திலும் அந்த அணியை சோயிப் மாலிக் வழிநடத்துவார். மொத்தத்தில் சவால்மிக்க இரு அணிகள் மல்லுகட்டுவதால்ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய நேரப்படி மாலை 4.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை சோனி இ.எஸ்.பி.என். சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

தொடர்புடைய செய்திகள்

1. பாகிஸ்தானில் தலீபான்கள் தற்கொலைப்படை தாக்குதல்: போலீஸ் ஒருவர் பலி
பாகிஸ்தானில் தலீபான்கள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் போலீசார் ஒருவர் பலியானார்.
2. மல்யுத்தமாக மாறிய விவாத நிகழ்ச்சி : சமூக வலைதளத்தில் வேகமாக பரவும் வீடியோ
பாகிஸ்தான் நாட்டு தொலைக்காட்சி ஒன்றில் நேரலையாக நடந்த விவாத நிகழ்ச்சி மல்யுத்தமாக மாறிய காட்சிகள் பரபரப்பை ஏற்படுத்தியது.
3. பாகிஸ்தானில் 3 அல் கொய்தா பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
பாகிஸ்தானில் 3 அல் கொய்தா பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
4. ‘மோசமாக ஆடினால் தாயகம் திரும்ப முடியாது’ பாகிஸ்தான் வீரர்களுக்கு கேப்டன் சர்ப்ராஸ் அகமது எச்சரிக்கை
உலக கோப்பை கிரிக்கெட்டில் இந்தியாவிடம் ‘சரண்’ அடைந்ததால் பாகிஸ்தான் அணி கடும் நெருக்கடிக்குள்ளாகி இருக்கிறது.
5. பாகிஸ்தானில் பயங்கரம்: மருத்துவமனையில் துப்பாக்கி சண்டை - 5 பேர் பலி
பாகிஸ்தானில் மருத்துவமனை ஒன்றில் நடந்த துப்பாக்கி சண்டையில் 5 பேர் பலியாகினர்.