கிரிக்கெட்

இந்தியாவுக்கு எதிரான 20 ஓவர் போட்டித்தொடர்: நியூசிலாந்து அணி அறிவிப்பு + "||" + New Zealand name squad for T20I series against India

இந்தியாவுக்கு எதிரான 20 ஓவர் போட்டித்தொடர்: நியூசிலாந்து அணி அறிவிப்பு

இந்தியாவுக்கு எதிரான 20 ஓவர் போட்டித்தொடர்: நியூசிலாந்து அணி அறிவிப்பு
இந்தியாவுக்கு எதிரான 20 ஓவர் போட்டித்தொடரில் பங்கேற்கும் நியூசிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆக்லாண்டு, 

இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடர் முடிந்ததும், மூன்று 20 ஓவர் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட இருக்கிறது. இந்தத் தொடரில் பங்கேற்கும் நியூசிலாந்து கிரிக்கெட் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

 நியூசிலாந்து அணியில் இடம் பெற்றுள்ள வீரர்கள் விவரம்: கனே வில்லியம்சன் (கேப்டன்),   டக்  பிரேஸ்வெல், கோலின் டி கிராண்ந்ஹோம், பெர்குசன், (முதல் இரண்டு போட்டிகளுக்கு மட்டும்) மார்டின் குப்தில், ஸ்காட் குக்கெலின், டேர்ல் மிட்செல், கோலின் முன்ரோ, மிட்செல் சாண்ட்னர், டிம் செபெர்ட் (விக்கெட் கீப்பர்), இஷ் சோதி, டிம் சவுதி, ரோஸ் டெய்லர், பிளேர் டிக்னெர் (மூன்றாவது போட்டிக்கு மட்டும்).

நியூசிலாந்து - இந்தியா மோதும் முதல்  20 ஓவர் போட்டி வெல்லிங்டனில் வரும் பிப்ரவரி 6 ஆம் தேதி நடைபெறுகிறது. ஏற்கனவே இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை நியூசிலாந்து அணி பறிகொடுத்துள்ள நிலையில், 20 ஓவர் போட்டித் தொடரை கைப்பற்ற நியூசிலாந்து அணி தீவிர முயற்சிகளை மேற்கொள்ளும்.


தொடர்புடைய செய்திகள்

1. உலக கோப்பை கிரிக்கெட் 1983 : இந்திய அணி “சாம்பியன்”
1983ம் ஆண்டு உலக கோப்பை கிரிக்கெட்டில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது.
2. துளிகள்
இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான ஆக்கி போட்டி தொடரில் 5-வது மற்றும் கடைசி ஆட்டம் பெர்த்தில் நேற்று நடந்தது.
3. துளிகள்
இந்தியாவை சேர்ந்த 51 வயதான பெண் நடுவர் லட்சுமி சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் போட்டி நடுவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
4. ‘இந்தியாவின் பிரித்தாளும் தலைவர்’ பிரதமர் மோடி விவகாரத்தில் ‘டோனை’ மாற்றிய டைம்...!
2019 நாடாளுமன்றத் தேர்தல் இறுதிக்கட்டத்தை நோக்கி செல்லும் நிலையில், டைம் பத்திரிக்கையின் அட்டைப்படத்தில் ‘இந்தியாவின் பிரித்தாளும் தலைவர்’ பிரதமர் மோடி என்ற தலைப்புடன் செய்தி வெளியாகியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
5. எல்லையில் பதற்றத்தை தணிக்க வேண்டும்: இந்தியாவுக்கு பாகிஸ்தான் வலியுறுத்தல்
எல்லையில் பதற்றத்தை தணிக்க வேண்டும் என்று இந்தியாவை பாகிஸ்தான் கேட்டுக்கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.