கிரிக்கெட்

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு பதிலடி கொடுக்குமா இங்கிலாந்து? 2-வது டெஸ்ட் இன்று தொடக்கம் + "||" + The 2nd Test starts today

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு பதிலடி கொடுக்குமா இங்கிலாந்து? 2-வது டெஸ்ட் இன்று தொடக்கம்

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு பதிலடி கொடுக்குமா இங்கிலாந்து? 2-வது டெஸ்ட் இன்று தொடக்கம்
வெஸ்ட் இண்டீசில் விளையாடி வரும் ஜோ ரூட் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணி பிரிட்ஜ்டவுனில் நடந்த முதலாவது டெஸ்டில் 381 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது.
ஆன்டிகுவா, 

வெஸ்ட் இண்டீசில் விளையாடி வரும் ஜோ ரூட் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணி பிரிட்ஜ்டவுனில் நடந்த முதலாவது டெஸ்டில் 381 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. இதனால் 3 போட்டி கொண்ட இந்த தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி ஆன்குவாவில் இன்று தொடங்குகிறது. தொடக்க டெஸ்டில் முதல் இன்னிங்சில் வெறும் 77 ரன்னில் சரண் அடைந்த இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் அதற்கு பரிகாரம் தேட வேண்டிய நெருக்கடியில் உள்ளனர். அந்த அணியில் சில மாற்றங்களும் செய்யப்பட்டுள்ளது. ஜோ டென்லி அறிமுக பேட்ஸ்மேனாக இடம் பெறுகிறார். வேகப்பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட் அணிக்கு திரும்புகிறார். மொத்தத்தில் இங்கிலாந்து அணி பதிலடி கொடுக்கும் வகையில் எழுச்சி பெறுமா? அல்லது மறுபடியும் அடங்கிப்போகுமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த டெஸ்ட் போட்டியை சோனி டென்1 சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.