200-வது ஒருநாள் போட்டி தோல்வி ஒரு மோசமான ஆட்டம். யாரும் இதை எதிர்பார்க்கவில்லை- ரோகித் சர்மா


200-வது ஒருநாள் போட்டி தோல்வி  ஒரு மோசமான ஆட்டம். யாரும் இதை எதிர்பார்க்கவில்லை- ரோகித் சர்மா
x
தினத்தந்தி 31 Jan 2019 12:25 PM GMT (Updated: 31 Jan 2019 12:25 PM GMT)

200-வது ஒருநாள் போட்டி தோல்வி ஒரு மோசமான ஆட்டம் இதை யாரும் இதை எதிர்பார்க்கவில்லை என ரோகித் சர்மா கூறி உள்ளார்.

இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 4-வது ஒருநாள் போட்டி ஹாமில்டனில் நடைபெற்றது. இதில் இந்திய அணி 92 ரன்களில் சுருண்டு மோசமான தோல்வியை தழுவியது. கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டதால் ரோகித் சர்மா இந்தப் போட்டிக்கு கேப்டனாக செயல்பட்டார். இது அவருக்கு 200-வது ஒருநாள் போட்டியாகும். இந்நிலையில் தோல்வி குறித்து ரோகித் சர்மா கூறுகையில், ‘நீண்ட காலத்திற்கு பிறகு இது ஒரு மோசமான ஆட்டம். யாரும் இதை எதிர்பார்க்கவில்லை. 

நியூசிலாந்து அணியின் பந்துவீச்சாளர்களை பாராட்டியே ஆக வேண்டும். இது அவர்களுக்கு ஒரு நல்ல முயற்சி. இது எங்களுக்கு ஒரு படிப்பினை. இதுபோன்ற அழுத்தங்களை நாம் உள் வாங்கித்தான் ஆக வேண்டும். இதற்காக யாரையும் குறை கூற முடியாது. அவங்கவங்களே தான் இதற்கு பொறுப்பு. ஆனால் செய்த தவறுகளை வீரர்கள் திருத்திக் கொள்வார்கள்’ என தெரிவித்துள்ளார். 

விராட் கோலியை நம்பி இந்திய அணி இல்லை என்று தெரிவித்துள்ளார். தோல்விக்கு பின் பேட்டி அளித்த  வேகப்பந்து வீச்சாளர் புவனேஸ்வர் குமார்  கூறியதாவது:-

கோலி சிறப்பான ஆட்டக்காரர் என்றாலும், அவரை நம்பி இந்திய அணி இல்லை. இருப்பினும், கோலி இல்லாதது இந்திய அணிக்கு இழப்பு தான் என்று ஒப்புக்கொண்ட புவனேஸ்வர் குமார், இந்த தோல்வியானது, தவறை திருத்திக் கொள்ள ஒரு வாய்ப்பாக அமையும் என்று தெரிவித்தார். 

Next Story