கிரிக்கெட்

நியூசிலாந்துக்கு எதிரான கடைசி போட்டியில் டோனி விளையாடுவாரா? உதவி பயிற்சியாளர் பதில் + "||" + India vs New Zealand: Is MS Dhoni fit to play in 5th ODI? Assistant coach Sanjay Bangar answers

நியூசிலாந்துக்கு எதிரான கடைசி போட்டியில் டோனி விளையாடுவாரா? உதவி பயிற்சியாளர் பதில்

நியூசிலாந்துக்கு எதிரான கடைசி போட்டியில் டோனி விளையாடுவாரா? உதவி பயிற்சியாளர் பதில்
நியூசிலாந்துக்கு எதிரான கடைசி போட்டியில் டோனி விளையாடுவாரா? என்ற கேள்விக்கு சஞ்செய் பாங்கர் பதிலளித்துள்ளார்.
வெல்லிங்டன்,

இந்தியா - நியூசிலாந்து அணிகள் பங்கேற்கும் 5-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி வெல்லிங்டன்னில் நாளை நடைபெறுகிறது. இரு அணிகளுக்கு இடையேயான முதல் 3 போட்டிகளை வென்று தொடரை கைப்பற்றிய இந்திய அணி, 4-வது ஒருநாள் போட்டியில் படுதோல்வியை சந்தித்தது. இந்திய கேப்டன் விராட் கோலிக்கு 4-வது போட்டியில் ஓய்வு அளிக்கப்பட்டு இருந்த நிலையில், விக்கெட் கீப்பர் டோனி, தசை பிடிப்பு காரணமாக போட்டியில் விளையாடவில்லை.

இந்த நிலையில், கடைசி ஒருநாள் போட்டியில் டோனி பங்கேற்பாரா என்ற சந்தேகம் நிலவியது. இந்த நிலையில், இந்திய அணியின் உதவி பயிற்சியாளர் சஞ்செய் பாங்கரிடம் இது பற்றி கேட்டனர். அப்போது, அவர் கூறும் போது, “ டோனி முழு உடல் தகுதியுடன் இருப்பதாகவும் கடைசி போட்டியில் கலந்து கொள்வார் என்றும் தெரிவித்தார்.