கிரிக்கெட்

தோனியை வீழ்த்திடாத வரை போட்டியில் வெற்றி பெற முடியாது; நியூசிலாந்து ஆல் ரவுண்டர் நீஷம் புகழாரம் + "||" + You haven't won the game until you get Dhoni out: Neesham

தோனியை வீழ்த்திடாத வரை போட்டியில் வெற்றி பெற முடியாது; நியூசிலாந்து ஆல் ரவுண்டர் நீஷம் புகழாரம்

தோனியை வீழ்த்திடாத வரை போட்டியில் வெற்றி பெற முடியாது; நியூசிலாந்து ஆல் ரவுண்டர் நீஷம் புகழாரம்
தோனியை வீழ்த்திடாத வரை நீங்கள் போட்டியில் வெற்றி பெற முடியாது என நியூசிலாந்து அணியின் ஆல் ரவுண்டர் நீஷம் கூறியுள்ளார்.
வெல்லிங்டன்,

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் போட்டிக்கு முன்வரை இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் தோனியின் பேட்டிங் திறன் பற்றி கேள்விகள் எழுந்தன.  ஆனால், அந்த தொடரில் 3 அரை சதங்கள் அடித்து விமர்சனங்களுக்கு முடிவு கட்டினார்.

அதன்பின்னர் நியூசிலாந்து அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் போட்டி தொடரில் 3 மற்றும் 4வது போட்டிகளில் தசை பிடிப்பினால் அவர் விளையாடவில்லை.  எனினும், 2வது போட்டியில் தோனி 48 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் விளையாடி தொடர்ந்து தனது திறனை வெளிப்படுத்தினார்.

இந்த நிலையில், நியூசிலாந்து ஆல் ரவுண்டர் ஜிம்மி நீஷம் செய்தியாளர்களிடம் கூறும்பொழுது, தோனி ஒரு சிறந்த விளையாட்டு வீரர்.  அவரது சாதனைகளே பேசும்.  அவர் உலக கோப்பை அணியில் விளையாடுவாரா இல்லையா என இந்திய ஊடகத்தில் தொடர்ந்து செய்திகள் வந்து கொண்டு உள்ளன என எனக்கு தெரியும்.  நீங்கள் அவருக்கு பந்து வீசும்பொழுது, அவரை ஆட்டமிழக்க செய்யாதவரை நீங்கள் போட்டியை வெற்றி பெற முடியாது என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. டோனி போல ஹெலிகாப்டர் ஷாட் அடித்து அசத்திய ரஷீத் கான் !
இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான டோனியின் தனித்துவமான ஷாட்களில் ஒன்றான ஹெலிகாப்டர் ஷாட் போலவே, ரஷித் கான் பந்தை சிக்சருக்கு விளாசியது ரசிகர்களை கவர்ந்தது.