கிரிக்கெட்

இந்திய வீராங்கனை மந்தனா முதலிடம் + "||" + Indian woman criket player Mandhana First place

இந்திய வீராங்கனை மந்தனா முதலிடம்

இந்திய வீராங்கனை மந்தனா முதலிடம்
ஐ.சி.சி தரவரிசை பட்டியலில் இந்திய வீராங்கனை மந்தனா முதலிடம் பிடித்தார்.
துபாய்,

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.), ஒரு நாள் போட்டியில் வீராங்கனைகளுக்கான புதிய தரவரிசை பட்டியலை நேற்று வெளியிட்டது. இதில் நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் 105, 90 ரன் வீதம் விளாசி தொடரை வெல்ல உறுதுணையாக இருந்த இந்திய வீராங்கனை ஸ்மிரிதி மந்தனா, பேட்டிங் தரவரிசையில் 3 இடங்கள் முன்னேறி முதலிடத்தை பிடித்துள்ளார். ஆஸ்திரேலியாவின் எலிஸ் பெர்ரி 2-வது இடத்திலும் மெக் லானிங் 3-வது இடத்திலும் உள்ளனர். நியூசிலாந்து கேப்டன் சட்டர்த்வெய்ட், இந்திய கேப்டன் மிதாலிராஜ் ஒரே புள்ளிகளுடன் 4-வது இடத்தை பகிர்ந்து கொண்டுள்ளனர்.


பந்து வீச்சாளர் தரவரிசையில் பாகிஸ்தான் வீராங்கனை சனா மிர் முதலிடத்தில் நீடிக்கிறார். இந்திய தரப்பில் கோஸ்வாமி 4-வது இடமும், பூனம் யாதவ் 8-வது இடமும், தீப்தி ஷர்மா 9-வது இடமும் வகிக்கிறார்கள்.