கிரிக்கெட்

ரஞ்சி கிரிக்கெட் இறுதிப்போட்டியில் விதர்பா-சவுராஷ்டிரா மோதல்: நாக்பூரில் இன்று தொடக்கம் + "||" + Vidarbha-Churachtra conflict in Ranji Cricket final: Start today in Nagpur

ரஞ்சி கிரிக்கெட் இறுதிப்போட்டியில் விதர்பா-சவுராஷ்டிரா மோதல்: நாக்பூரில் இன்று தொடக்கம்

ரஞ்சி கிரிக்கெட் இறுதிப்போட்டியில் விதர்பா-சவுராஷ்டிரா மோதல்: நாக்பூரில் இன்று தொடக்கம்
நாக்பூரில் இன்று தொடங்கும் ரஞ்சி கிரிக்கெட் இறுதிப்போட்டியில், விதர்பா-சவுராஷ்டிரா அணிகள் மோத உள்ளன.
நாக்பூர்,

ரஞ்சி கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டியில் நடப்பு சாம்பியன் விதர்பா, சவுராஷ்டிரா அணியை எதிர்கொள்கிறது. இந்த ஆட்டம் மராட்டிய மாநிலத்தில் உள்ள நாக்பூரில் இன்று காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது. பைஸ் பாசல் தலைமையிலான விதர்பா அணியில் பேட்டிங்கில் வாசிம் ஜாபரும், பந்து வீச்சில் உமேஷ் யாதவும் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள். ஜெய்தேவ் உனட்கட் தலைமையிலான சவுராஷ்டிரா அணியில் புஜாரா அரைஇறுதியில் சதம் அடித்து அணியை இறுதிப்போட்டிக்கு தகுதி பெற வைத்தார். இதேபோல் பேட்டிங்கில் ஷெல்டன் ஜாக்சன் (10 ஆட்டங்களில் 838 ரன்கள்), பந்து வீச்சில் 52 விக்கெட்டுகள் வீழ்த்திய சுழற்பந்து வீச்சாளர் தர்மேந்திரசிங் ஜடேஜா ஆகியோரும் கலக்கி வருகிறார்கள். இரு அணிகளிலும் சிறந்த வீரர்கள் இடம் பிடித்து இருப்பதால் இந்த போட்டியில் அனல் பறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.