கிரிக்கெட்

5வது ஒரு நாள் போட்டி; நியூசிலாந்து அணிக்கு 253 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது + "||" + 5th ODI match; New Zealand needs 253 to win

5வது ஒரு நாள் போட்டி; நியூசிலாந்து அணிக்கு 253 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது

5வது ஒரு நாள் போட்டி; நியூசிலாந்து அணிக்கு 253 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது
5வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டியில் நியூசிலாந்து அணிக்கு 253 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
வெலிங்டன்,

இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் 3 ஆட்டங்களில் முறையே 8 விக்கெட், 90 ரன், 7 விக்கெட் வித்தியாசங்களில் வெற்றி பெற்ற இந்திய அணி 4வது ஆட்டத்தில் படுதோல்வி அடைந்தது. ஏற்கனவே தொடரை கைப்பற்றி விட்ட இந்திய அணி 3-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 5வது மற்றும் கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டி வெலிங்டனில் இன்று நடக்கிறது.  இதில் டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு செய்துள்ளது.

இந்திய அணியில் கலீல், குல்தீப் மற்றும் கார்த்திக் ஆகியோருக்கு பதிலாக ஷமி, தோனி மற்றும் விஜய் சங்கர் சேர்க்கப்பட்டு உள்ளனர்.  நியூசிலாந்து அணியில் குப்தில்லுக்கு பதிலாக மன்ரோ விளையாட உள்ளார்.

இதனை தொடர்ந்து இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ரோகித் சர்மா மற்றும் ஷிகர் தவான் விளையாட தொடங்கினர்.  அவர்கள் முறையே 2 மற்றும் 6 ரன்களில் ஆட்டமிழந்தனர்.

அதன்பின்னர் விளையாடிய கில் (7), தோனி (1) ரன்களில் வெளியேறினர்.  ஆனால் ராயுடு நின்று விளையாடி 90 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்து உள்ளார்.  சங்கர் 45 ரன்களில் ரன் அவுட்டானார்.  ஜாதவ் (34), ஹர்தீக் பாண்ட்யா (45), புவனேஷ்குமார் (6), முகமது ஷமி (1) ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர்.  சஹல் ரன்கள் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழக்காமல் உள்ளார்.

இந்திய அணி 49.5 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 252 ரன்கள் எடுத்துள்ளது.  இதனால் நியூசிலாந்து அணி வெற்றி பெற 253 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.