தோனி கீப்பிங் செய்யும்போது கிரீஸைவிட்டு வெளியேறாதீர்கள் -ஐசிசி எச்சரிக்கை


தோனி கீப்பிங் செய்யும்போது கிரீஸைவிட்டு வெளியேறாதீர்கள்  -ஐசிசி எச்சரிக்கை
x
தினத்தந்தி 4 Feb 2019 6:28 AM GMT (Updated: 4 Feb 2019 6:28 AM GMT)

தோனி கீப்பிங் செய்யும்போது கிரீஸைவிட்டு வெளியேறாதீர்கள் என டுவிட்டரில் ஐசிசி தெரிவித்து உள்ளது.

ஸ்டெம்புக்கு பின்னால் தோனி நிற்கும்போது பேட்ஸ்மேன்கள் யாரும் கிரீஸிலிருந்து காலை எடுக்காதீர்கள் என ஐசிசி பதிவிட்டுள்ள டுவிட்டர் பதிவு இணையத்தில் மிகுந்த கவனத்தை பெற்றுவருகிறது.

நியூசிலாந்து அணிக்கு எதிரான ஐந்தாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் மகேந்திர சிங் தோனி, கிரீஸைவிட்டு வெளியேவந்த நியூசிலாந்து வீரர் ஜேம்ஸ் நீசமை, கண் இமைக்கும் நேரத்திற்குள் ரன் அவுட் ஆக்கினார்.

இந்த நிலையில் ஜப்பானைச் சேர்ந்த ஒருவர், தங்களுக்கு ஏதாவது கிரிக்கெட் அறிவுரை இருந்தால் கொடுங்கள் என ஐசிசியின் டுவிட்டர் பக்கத்தில் கேட்டார்.

இதற்கு ஐசிசி, ஸ்டெம்பிற்கு பின்னால் தோனி நிற்கும்போது, பேட்ஸ்மேன்கள் யாரும் கிரீஸைவிட்டு காலை எடுக்காதீர்கள் என பதில் அளித்திருந்தது. ஐசிசியின் இந்தப் பதிவு தற்போது இணையத்தில் கவனம் பெற்றுவருகிறது.


Next Story