கிரிக்கெட்

இலங்கை அணியில் கேப்டன் சன்டிமால் நீக்கம் + "||" + Captain chandimal of Sri Lanka team Removal

இலங்கை அணியில் கேப்டன் சன்டிமால் நீக்கம்

இலங்கை அணியில் கேப்டன் சன்டிமால் நீக்கம்
இலங்கை அணியில் கேப்டன் சன்டிமால் நீக்கப்பட்டார்.
கொழும்பு,

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டு டெஸ்டுகளிலும் படுதோல்வி அடைந்த இலங்கை கிரிக்கெட் அணி அடுத்ததாக தென்ஆப்பிரிக்காவுக்கு சென்று 2 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதலாவது டெஸ்ட் போட்டி டர்பனில் வருகிற 13-ந்தேதி தொடங்குகிறது.


இந்த டெஸ்ட் தொடருக்கான இலங்கை அணி நேற்று அறிவிக்கப்பட்டது. அதிரடியாக கேப்டன் தினேஷ் சன்டிமால் நீக்கப்பட்டார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2 டெஸ்டில் 4 இன்னிங்சிலும் சேர்த்து வெறும் 24 ரன் மட்டுமே எடுத்து சொதப்பினார். கடந்த 5 டெஸ்டுகளில் அவர் ஒரு அரைசதம் மட்டுமே கண்டுள்ளார். பேட்டிங்கில் தடுமாறி வருவதால் அவரை கழற்றி விட்ட தேர்வு குழுவினர், உள்ளூர் போட்டிகளில் கவனம் செலுத்தும்படி அறிவுறுத்தியுள்ளனர். அவருக்கு பதிலாக தொடக்க ஆட்டக்காரர் திமுத் கருணாரத்னே கேப்டனாக செயல்படுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சில தினங்களுக்கு முன்பு முதல்தர கிரிக்கெட்டில் இரண்டு இன்னிங்சிலும் இரட்டைச்சதம் அடித்து வரலாறு படைத்த இலங்கை வீரர் ஏஞ்சலே பெரேரா முதல்முறையாக டெஸ்ட் அணிக்கு தேர்வாகியுள்ளார்.