கிரிக்கெட்

நியூசிலாந்துக்கு எதிரான முதல் 20 ஓவர் கிரிக்கெட்: இந்திய அணி பந்து வீச்சு + "||" + India bowl; Karthik, Dhoni, Pant all playing

நியூசிலாந்துக்கு எதிரான முதல் 20 ஓவர் கிரிக்கெட்: இந்திய அணி பந்து வீச்சு

நியூசிலாந்துக்கு எதிரான முதல் 20 ஓவர் கிரிக்கெட்: இந்திய அணி பந்து வீச்சு
நியூசிலாந்துக்கு எதிரான முதல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.
வெல்லிங்டன்,

இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. ஒரு நாள் தொடரை 4-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்திய இந்திய அணி அடுத்ததாக 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் விளையாடுகிறது. இதன்படி இந்தியா-நியூசிலாந்து மோதும் முதலாவது 20 ஓவர் போட்டி வெலிங்டனில் இன்று (புதன்கிழமை) நடக்கிறது. 

இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா, முதலில் பந்து வீசுவதாக அறிவித்தார். இதன்படி நியூசிலாந்து அணி முதலில் பேட் செய்ய உள்ளது. 

இரு அணிகளிலும் இடம் பெற்றுள்ள வீரர்கள் விவரம்:-

இந்தியா: 

ரோகித் சர்மா (கேப்டன்), ஷிகர் தவான், ரிஷப் பாண்ட், விஜய்சங்கர், தினேஷ் கார்திக், எம்.எஸ் டோனி, ஹர்திக் பாண்ட்யா, க்ருணல் பாண்ட்யா, புவனேஷ் குமார், யுஸ்வேந்திர சகால், கலீல் அகமது

நியூசிலாந்து: 

கேன் வில்லியம்சன் (கேப்டன்), காலின் முன்ரோ, டிம் செய்பெர்ட் (விக்கெட் கீப்பர்), ராஸ் டெய்லர், டேரில் மிட்செல்,  காலின் டி கிரான்ட் ஹோம், மிட்செல் சான்ட்னெர், ஸ்காட் குஜ்ஜெலின், டிம் சோதி, இஷ் சோதி,  லோக்கி பெர்குசன்