கிரிக்கெட்

நியூசிலாந்துக்கு எதிரான முதல் 20 ஓவர் கிரிக்கெட்:80 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி தோல்வி + "||" + The first 20 over against New Zealand: the Indian team have failed

நியூசிலாந்துக்கு எதிரான முதல் 20 ஓவர் கிரிக்கெட்:80 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி தோல்வி

நியூசிலாந்துக்கு எதிரான முதல் 20 ஓவர் கிரிக்கெட்:80 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி தோல்வி
நியூசிலாந்துக்கு எதிரான முதல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் 80 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி தோல்வியடைந்தது.
வெல்லிங்டன்,

இந்தியா-நியூசிலாந்து  முதலாவது 20 ஓவர் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 219 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக டிம் செய்பெர்ட் 43 பந்துகளில் 84 ரன்கள் விளாசினார். காலின் முன்ரோ, கேன் வில்லியம்சன் தலா 34 ரன்கள் எடுத்தனர். இந்திய தரப்பில் ஹர்திக் பாண்ட்யா 2 விக்கெட் வீழ்த்தினார்.

இதனையடுத்து 220 ரன் இலக்குடன் விளையாடிய இந்திய அணி 19.2 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 139 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் 80 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி தோல்வியடைந்தது. இந்திய தரப்பில் அதிகபட்சமாக எம்.எஸ் டோனி 39 ரன்கள் எடுத்தார். நியூசிலாந்து தரப்பில் அதிகபட்சமாக டிம் சோதி 3 விக்கெட் வீழ்த்தினார். இஷ் சோதி, லோக்கி பெர்குசன், மிட்செல் சான்ட்னெர் தலா 2 விக்கெட் எடுத்தனர்.