கிரிக்கெட்

வெஸ்ட்இண்டீஸ் அணியில் மீண்டும் கெய்ல் + "||" + Gayle again in the West Indies team

வெஸ்ட்இண்டீஸ் அணியில் மீண்டும் கெய்ல்

வெஸ்ட்இண்டீஸ் அணியில் மீண்டும் கெய்ல்
வெஸ்ட்இண்டீஸ் அணியில் மீண்டும் கெய்ல் இடம் பிடித்துள்ளார்.
கிரோஸ் இஸ்லெட்,

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி சொந்த மண்ணில் இங்கிலாந்துக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாட உள்ளது. முதலாவது ஒரு நாள் போட்டி வருகிற 20-ந்தேதி பிரிட்ஜ்டவுனில் நடக்கிறது. இதில் முதல் 2 ஒரு நாள் போட்டிக்கான வெஸ்ட் இண்டீஸ் அணி நேற்று அறிவிக்கப்பட்டது. அதிரடி வீரர் 39 வயதான கிறிஸ் கெய்ல் அணிக்கு திரும்பியுள்ளார். கடைசியாக கடந்த ஆண்டு ஜூலை மாதம் வங்காளதேசத்திற்கு எதிராக ஆடிய கிறிஸ் கெய்ல், அடுத்து வந்த தொடர்களில் தன்னை தேர்வு செய்ய வேண்டாம் என்று கூறி விட்டு, 20 ஓவர் லீக் போட்டிகளில் கவனம் செலுத்தியது குறிப்பிடத்தக்கது. இதே போல் சொந்த விஷயம் காரணமாக இந்திய பயணத்தை தவிர்த்த மற்றொரு அதிரடி வீரர் இவின் லீவிசும் அணிக்கு தேர்வாகியுள்ளார். ஜாசன் ஹோல்டர் தலைமையிலான இந்த அணியில் டேரன் பிரவோ, ஹெட்மயர், ஷாய் ஹோப் ஆகிய முன்னணி வீரர்களும் இடம் பிடித்துள்ளனர்.


தொடர்புடைய செய்திகள்

1. ‘ஆஸ்திரேலிய அணி மீண்டும் உலக கோப்பையை வெல்லும்’ - உதவி பயிற்சியாளர் பாண்டிங் நம்பிக்கை
ஆஸ்திரேலிய அணி மீண்டும் உலக கோப்பையை வெல்லும் என்று முன்னாள் கேப்டனும், உதவி பயிற்சியாளருமான ரிக்கிபாண்டிங் கூறியுள்ளார்.
2. ரஞ்சி கிரிக்கெட்: விதர்பா அணி மீண்டும் ‘சாம்பியன்’
ரஞ்சி கிரிக்கெட் இறுதிப்போட்டியில் விதர்பா அணி 78 ரன்கள் வித்தியாசத்தில் சவுராஷ்டிராவை சாய்த்து தொடர்ந்து 2-வது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
3. வலைத்தளத்தில் கஸ்தூரி மீண்டும் மோதல்
வலைத்தளத்தில் நடிகை கஸ்தூரி மீண்டும் மோதிய சம்பவம் நிகழ்ந்துள்ளது.
4. கதிர்காமம் தொகுதியை மீண்டும் காங்கிரஸ் கோட்டையாக மாற்றுவோம் நாராயணசாமி உறுதி
கதிர்காமம் தொகுதியை மீண்டும் காங்கிரஸ் கோட்டையாக மாற்றுவோம் என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறினார்.
5. வெஸ்ட்இண்டீஸ் வீரர் கெய்லுக்கு ரூ.1½ கோடி இழப்பீடு - ஆஸ்திரேலிய உச்ச நீதிமன்றம் உத்தரவு
வெஸ்ட்இண்டீஸ் வீரர் கெய்லுக்கு ரூ.1½ கோடி இழப்பீடு வழங்க ஆஸ்திரேலிய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஆசிரியரின் தேர்வுகள்...