கிரிக்கெட்

இந்தியாவுக்கு எதிரான 2-வது இருபது ஓவர் கிரிக்கெட் போட்டி: நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் + "||" + India vs New Zealand 2nd T20I Live Cricket Score: New Zealand Win Toss, Opt to Bat at Eden Park

இந்தியாவுக்கு எதிரான 2-வது இருபது ஓவர் கிரிக்கெட் போட்டி: நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங்

இந்தியாவுக்கு எதிரான 2-வது இருபது ஓவர் கிரிக்கெட் போட்டி: நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங்
இந்தியாவுக்கு எதிரான 2-வது இருபது ஓவர் கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.
ஆக்லாந்து,

நியூசிலாந்தில் விளையாடி வரும் இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் வெலிங்டனில் நடந்த முதலாவது ஆட்டத்தில் நியூசிலாந்து அணி எளிதில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 2-வது 20 ஓவர் போட்டி ஆக்லாந்தில் உள்ள ஈடன்பார்க் ஸ்டேடியத்தில் இன்று  நடைபெற்று வருகிறது. 

இந்தப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் வில்லியம்சன் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதன்படி, இந்திய அணி முதலில் பந்து வீசி வருகிறது. 

இந்திய அணியை பொறுத்தவரை இந்தப்போட்டியில் கட்டாயம் வெல்ல வேண்டிய சூழலில் உள்ளது. இந்தப்போட்டியில் தோல்வி அடைந்தால்,  நியூசிலாந்துக்கு எதிரான தொடரை இழக்க வேண்டியதுதான். 

தொடக்க ஆட்டத்தில் இந்திய அணி 80 ரன்கள் வித்தியாசத்தில் மோசமான தோல்வியை தழுவியது. முந்தைய ஆட்டத்தில் செய்த தவறுகளை திருத்திக்கொண்டு இந்த ஆட்டத்தில் பதிலடி கொடுக்கும் வகையில் நமது வீரர்கள் எழுச்சி பெறுவார்களா? என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாகும். இந்திய அணி கடைசியாக ஆடிய 10 இருபது ஓவர் தொடர்களை இழந்ததில்லை. அந்த பெருமையை தக்க வைக்க இன்றைய ஆட்டத்தில் கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டும்.

இரு அணிகளிலும் இடம் பெற்றுள்ள வீரர்கள் விவரம்:
இந்தியா: - ரோகித் சர்மா (கேப்டன்), ஷிகர் தவான், ரிஷப் பாண்ட், தினேஷ் கார்த்திக், எம்.எஸ் டோனி, விஜய் சங்கர், ஹர்திக் பாண்ட்யா, க்ருணல் பாண்ட்யா, யுஸ்வேந்திர சகால், புவனேஷ்குமார், கலீல் அகமது,

நியூசிலாந்து, 
 டிம் செய்பெர்ட், காலின் முன்ரோ, கேன் வில்லியம்சன் (கேப்டன்), ராஸ் டெய்லர், டேரில் மிட்செல்,  காலின் டி கிரான்ட்ஹோம், சான்ட்னெர், ஸ்காட் குஜ்ஜெலின், டிம் சவுதி, இஷ் சோதி, லோக்கி பெர்குசன்.

தொடர்புடைய செய்திகள்

1. பாகிஸ்தான் தேசிய தின விழாவில் இந்திய பிரதிநிதிகள் கலந்து கொள்ள மாட்டார்கள்: மத்திய அரசு
பாகிஸ்தான் தேசிய தின விழாவில் இந்திய பிரதிநிதிகள் கலந்து கொள்ள மாட்டார்கள் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
2. வேகமாக வளரும் மிகப்பெரிய பொருளாதார நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது: ஐ.எம்.எப்
உலகில் வேகமாக வளரும் மிகப்பெரிய பொருளாதார நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது என்று சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.
3. இந்தியாவை 500 குடும்பங்கள் தான் ஆட்சி செய்கிறது; மக்கள் ஆட்சியா? மன்னர் ஆட்சியா? -உயர்நீதிமன்றம்
அரசியல் கட்சிகள் வாரிசு அரசியலை ஊக்குவிக்கின்றன என உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
4. எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறல்: இந்தியா பதிலடி
எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியது. இதற்கு இந்திய ராணுவமும் பதிலடி கொடுத்தது.
5. இந்தியா- பாகிஸ்தான் இடையேயான பதற்றத்தை தணிக்க ஆக்கப்பூர்வமான பங்களிப்பு அளித்தோம்: சீனா
இந்தியா- பாகிஸ்தான் இடையேயான பதற்றத்தை தணிக்க ஆக்கப்பூர்வமான வகையில் செயல்பட்டோம் என்று சீனா தெரிவித்துள்ளது.