2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி: இந்திய அணிக்கு 159 ரன்கள் வெற்றி இலக்கு


2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி: இந்திய அணிக்கு 159 ரன்கள் வெற்றி இலக்கு
x
தினத்தந்தி 8 Feb 2019 7:51 AM GMT (Updated: 8 Feb 2019 7:51 AM GMT)

நியூசிலாந்துக்கு எதிரான 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணிக்கு வெற்றி இலக்காக 159 ரன்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஆக்லாந்து, 

நியூசிலாந்தில் விளையாடி வரும் இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் வெலிங்டனில் நடந்த முதலாவது ஆட்டத்தில் நியூசிலாந்து அணி எளிதில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 2-வது 20 ஓவர் போட்டி ஆக்லாந்தில் உள்ள ஈடன்பார்க் ஸ்டேடியத்தில் இன்று  நடைபெற்று வருகிறது.

இந்தப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் வில்லியம்சன் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதன்படி, இந்திய அணி முதலில் பந்து வீசியது. கடந்த போட்டியை போல ரன்களை வாரி வழங்காமல், இன்றைய போட்டியில், இந்திய பந்து வீச்சாளர்கள் சுதாரிப்புடன் பந்து வீசினர். முதல் ஆட்டத்தில் மிரட்டிய நியூசிலாந்து துவக்க வீரர் செய்பர்ட் 12 ரன்களில்  புவனேஷ்குமார் பந்தில் ஆட்டம் இழந்தார்.  மற்றொரு துவக்க ஆட்டக்காரர் கோலின் முன்ரோ ( 12 ரன்கள்), கேப்டன் வில்லியம்சன் (20 ரன்கள்) , மிட்செல் ( 1 ரன்), என சீரான இடைவெளியில் ஆட்டமிழந்து வெளியேறினர். 

சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரோஸ் டெய்லர் 42 ரன்களில் ரன் அவுட் மூலம் ஆட்டமிழந்தார். 4 சிக்சர்களை பறக்க விட்டு அதிரடி காட்டிய  கிரான்ட்ஹோம் (50 ரன்கள், 28 பந்துகள்) ஹர்திக் பாண்ட்யா பந்தில் ஆட்டமிழந்தார். நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் நியூசிலாந்து அணி 8 விக்கெட் இழப்புக்கு 158 ரன்கள் சேர்த்துள்ளது. இந்திய அணியில் அதிகபட்சமாக குருணால் பாண்ட்யா 3 விக்கெட்டுகளையும், கலீல் அகமது 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

Next Story